ஐசிசி 2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் துவங்க உள்ளது. அந்தத் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியிலிருந்து கடைசி நேரத்தில் துணைக் கேப்டன் கழற்றி விடப்பட்டது பலரையும் ஆசிரியப்பட வைத்தது. இருப்பினும் கடைசியாக விளையாடிய 18 சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அரை சதம் கூட அடிக்காமல் திணறிய அவர் மோசமான ஃபார்மில் இருக்கிறார்.
அதனால் அணியை விட யாரும் பெரிதில்லை என்று கருதிய தேர்வுக்குழு கடைசி நேரத்தில் அவரை கழற்றி விட்டது பலரையும் மகிழ்ச்சியடைய வைத்தது. அந்த முடிவால் சஞ்சு சாம்சன் மீண்டும் ஓப்பனிங்கில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதன் காரணமாக பேக்-அப் கீப்பராக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த ஜிதேஷ் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு மிடில் ஆர்டரில் விளையாட ரிங்கு சிங்கை தேர்ந்தெடுத்துள்ளது.
இதயம் உடைந்தது:
அது மட்டுமின்றி இஷான் கிசான் பேக்-அப் ஓப்பனிங் பேட்ஸ்மேனாகவும் விக்கெட் கீப்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் கிடைத்த வாய்ப்புகளில் நன்றாக விளையாடிய ஜிதேஷ் சர்மா தவறு செய்யாத போதிலும் கழற்றி விடப்பட்டதாக தினேஷ் கார்த்திக் போன்ற முன்னாள் வீரர்கள் விமர்சித்தனர். அது பற்றி கேட்டதற்கு ஜித்தேஷ் மேலே எந்த தவறும் இல்லையென்று தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் தெரிவித்தார்.
மாறாக இந்திய அணியின் நன்மைக்காகவும் தேவையான காம்பினேஷனுக்காகவும் அம்முடிவு எடுக்கப்பட்டதாக அகர்கர் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கடைசி நேரத்தில் 2026 டி20 உலகக் கோப்பை இந்திய அணியிலிருந்து கழற்றி விடப்பட்டது தன்னுடைய இதயத்தை உடைத்ததாக ஜிதேஷ் சர்மா சோகத்துடன் தெரிவித்துள்ளார். இருப்பினும் அதற்கான நியாயமான காரணத்தை அகர்கர் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தம்மிடம் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜிதேஷ் சோகம்:
இது பற்றி ஜிதேஷ் பேசியது பின்வருமாறு. “ஐசிசி டி20 உலகக் கோப்பையில் விளையாடுவதற்காக கடினமாக உழைத்த எனக்கு அது இதயத்தை உடைப்பதாக அமைந்தது. ஆனால் அதுவே விதியாகும். அதை நான் மறுக்கவில்லை. தற்சமயத்தில் உணர்ச்சியற்ற முறையில் இருக்கும் என்னால் எதையும் செயல்முறைப்படுத்த முடியவில்லை”
இதையும் படிங்க: இன்னும் 34 ரன்கள் மட்டுமே தேவை.. ஷிகார் தவான் மற்றும் விராட் கோலியை முந்த காத்திருக்கும் – ஷ்ரேயாஸ் ஐயர்
“அணி அறிவிக்கப்படும் வரை என்னை அவர்கள் புறக்கணித்தது எனக்குத் தெரியாது. இருப்பினும் அதற்கான காரணம் பற்றி தேர்வுக் குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை நான் ஏற்றுக்கொண்டேன். அது நியாயமான காரணமாகும். அதன் பின் நான் தேர்வாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களிடம் பேசினேன். அப்போது அவர்கள் சொன்ன காரணம் நியாயமானதாக எனக்குத் தோன்றியது. அவர்கள் என்னிடம் சொல்ல விரும்பியதை நான் முழுமையாக புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்டேன்” என்று கூறினார்.



