இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வதோதராவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
அதை சேசிங் செய்த இந்தியா 49 ஓவரில் 306/6 ரன்கள் குவித்து புத்தாண்டை வெற்றிகரமாக துவங்கியது. இந்திய அணிக்கு பேட்டிங்கில் விராட் கோலி 93, கேப்டன் சுப்மன் கில் 56, ஷ்ரேயஸ் ஐயர் 49 ரன்களை குவித்து முக்கிய பங்காற்றினர். பந்து வீச்சுத் துறையில் ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.
கேப்டன் சுப்மன் கில்:
முன்னதாக ரோஹித் சர்மாவை கழற்றி விட்ட தேர்வுக்குழு சுப்மன் கில் தலைமையில் 2027 உலகக் கோப்பை இந்திய அணியை உருவாக்கத் துவங்கியுள்ளது. அந்த வாய்ப்பில் முதல் தொடரிலேயே ஆஸ்திரேலியா மண்ணில் அவரது தலைமையில் இந்தியா 2 – 1 (3) என்ற கணக்கில் தோற்றது. அடுத்ததாக கழுத்து வலியால் தென்னாப்பிரிக்க தொடரில் விளையாடாத அவர் இத்தொடரில் மீண்டும் இந்திய அணியை தலைமைத் தாங்குகிறார்.
இந்நிலையில் இந்திய அணியில் உள்ள தம்மைப் போன்ற அனைத்து வீரர்களுக்கும் சுப்மன் கில் போதுமான சுதந்திரத்தை வழங்குவதாக ஹர்ஷித் ராணா தெரிவித்துள்ளார். அந்தத் தலைமைப்பண்பை தாம் மிகவும் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார். ஏனெனில் வீரர்களுக்கு சுதந்திரம் கிடைக்கும் போது சிறப்பாக விளையாடி வெற்றியில் பங்காற்ற முடியும் என்று ராணா தெரிவித்துள்ளார்.
நல்ல தலைமைப்பண்பு:
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “என்னைப் பொறுத்த வரை சுப்மன் கில் சுதந்திரமான ஆக்ரோஷமான கேப்டன். ஒரு முடிவை எடுக்க வேண்டுமென்றால் அதைப் பற்றி அவர் முன்கூட்டியே யோசிப்பார். ஆனால் அந்த முடிவை எடுத்த பின் அதைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. தனிப்பட்ட முறையில் இப்படிப்பட்ட அணுகு முறையை நான் விரும்புகிறேன்”
இதையும் படிங்க: 37 வயதில் இப்போவும் விராட் கோலி.. வெறித்தனத்துடன் தொடர்ச்சியாக அசத்த இதான் காரணம்.. ரவி சாஸ்திரி
“அதாவது ஒரு சுதந்திரமான கேப்டன் களத்தில் தம்முடைய வீரர்கள் செய்ய விரும்புவதை சுதந்திரமாக செய்வதற்கான சுதந்திரத்தை வழங்க வேண்டும். அந்த தலைமைப் பண்பு அவரிடம் இருப்பதில் நான் விரும்பக்கூடிய ஒன்றாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் 2வது போட்டி ஜனவரி 14ஆம் ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.



