37 வயதில் இப்போவும் விராட் கோலி.. வெறித்தனத்துடன் தொடர்ச்சியாக அசத்த இதான் காரணம்.. ரவி சாஸ்திரி

Ravi Shastri
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி 2026 புத்தாண்டில் நியூசிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. அத்தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த இந்தியா 1 – 0* என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. வதோதராவில் நடைபெற்ற அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து 301 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

இந்திய அணிக்கு நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி சதத்தை தவற விட்டாலும் 93 ரன்கள் குவித்து வெற்றியில் முக்கிய பங்காற்றினார். அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இலங்கை ஜாம்பவான் குமார் சங்ககாராவை முந்தி சர்வதேச கிரிக்கெட்டில் 2வது அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அத்துடன் சச்சின் டெண்டுல்கரை முந்தி வேகமாக 28000 சர்வதேச ரன்கள் அடித்த வீரராகவும் விராட் கோலி சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

37 வயதிலும் வெறித்தனம்:

இப்படி 2008 முதல் ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடும் அவர் இந்திய அணியின் நிறைய வெற்றிகளில் பங்காற்றியுள்ளார். தற்போது டெஸ்ட், டி20 போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட விராட் கோலி 2027 உலகக் கோப்பையில் விளையாடி வெற்றியுடன் விடை பெற திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அதற்கு முன் அவரை கழற்றி விட தேர்வுக்குழு முயற்சித்து வருகின்றது.

ஆனால் அதற்கெல்லாம் அசராத விராட் கோலி கடைசி 4 போட்டிகளில் 2 அரை சதங்கள், 2 சதங்கள் அடித்து ஐசிசி தரவரிசையில் நம்பர் 2 பேட்ஸ்மேனாக முன்னேறி பதிலடி வருகிறார். இந்நிலையில் 37 வயதிலும் விராட் கோலி இவ்வளவு வெறித்தனத்துடன் விளையாட தன்னுடைய உடலை ஃபிட்டாக வைத்திருப்பதே முக்கிய காரணம் என்று முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சாஸ்திரி பாராட்டு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “அவரிடம் இருக்கும் ஒற்றை எண்ணம் வெற்றிக்கான பசி. அதற்காக உடலை எல்லைக்கு மேல் தள்ளுவதற்கு விருப்பம் வேண்டும். பயிற்சியாளராக இந்திய அணியில் நான் இருந்த சமயங்களில் விராட் கோலி தன்னுடைய பணி நெறிமுறைகளை எதற்கும் 2வதாக வைத்திருந்ததை நான் பார்த்ததில்லை”

இதையும் படிங்க: இந்தியா அவங்கள கைக்குள்ள வெச்சுகிட்டு பாகிஸ்தான் வரல.. அந்த அமைப்பே தேவையில்ல.. சயீஜ் அஜ்மல்

“தனது வேலையை அவர் எப்படி செய்கிறார் என்பதை நான் பார்த்துள்ளேன். முதல் போட்டியில் அவர் கேட்ச்களை பிடித்த விதம், வெளிப்புற களத்தில் பந்தை பிடித்து விக்கெட் கீப்பர் கைகளில் தூக்கி எறிந்த விதம் ஆகியவை அதற்கு எடுத்துக்காட்டாகும். அவருடைய பேட்டிங் தவிர்த்து மற்ற அனைத்து திறமைகளும் வழக்கமான விஷயமாகும்” என்று கூறினார். இதைத் தொடர்ந்து இத்தொடரின் இரண்டாவது போட்டி ஜனவரி 14ஆம் தேதி துவங்குவது குறிப்பிடத்தக்கது.

Advertisement