இந்தியா – பாகிஸ்தான் இப்படி செய்வதை பாத்தா வலிக்குது.. உலகிற்கு ஊக்கமாக இருக்கனும்.. ஜேசன் ஹோல்டர்

Jason Holder
- Advertisement -

இந்தியா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் இடையே தற்சமயத்தில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் நிகழ்த்திய தாக்குதலில் 26 இந்தியர்கள் இயற்கை எய்தினார்கள். அதற்கு பதிலடியாக கடந்த ஆசியக் கோப்பையில் பாகிஸ்தான் அணியுடன் இந்தியா கைகுலுக்காமல் வெளியேறியது சர்ச்சையானது.

அதே போல பாகிஸ்தான் தலைவர் கைகளால் கோப்பையை இந்திய அணி வாங்க மறுத்ததும் சர்ச்சையை உண்டாக்கியது. இந்நிலையில் இந்தியாவும் பாகிஸ்தானும் இப்படி விளையாட்டில் அரசியலை கலப்பதைப் பார்ப்பது வேதனையளிப்பதாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் கூறியுள்ளார். அத்துடன் உலகிற்கு உத்வேகமளிக்க இந்தியா – பாகிஸ்தான் கூடிய விரைவில் பகையை மறைந்து நட்பாக வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

- Advertisement -

வருத்தமான நடத்தைகள்:

இது பற்றி ஹோல்டர் பேசியது பின்வருமாறு. “நேர்மையாக சொல்ல வேண்டுமெனில் இந்த இந்தியா – பாகிஸ்தான் மோதல்களை நான் விரும்பவில்லை. அது கிரிக்கெட்டின் களத்திற்கு அப்பால் எவ்வளவு செல்கிறது என்பதைப் பார்ப்பது வருத்தமாக இருக்கிறது. ஏனென்றால் இவர்கள் உலக கிரிக்கெட்டின் 2 சக்தி வாய்ந்த மையங்கள். கோப்பையை வென்று விட்டு அதை வாங்காமல் சென்றது போன்ற தருணங்கள் தேவையற்றது”

“அது நம்முடைய விளையாட்டில் இருக்கக்கூடாது. குறிப்பாக உலக கிரிக்கெட்டின் தூதுவர்களாக இருப்பதைப் பற்றி பேசும் நாம் இவ்வாறு நடந்து கொள்ளக்கூடாது. நீங்கள் அடுத்த தலைமுறைக்கும் உலகிற்கும் உத்வேகத்தை கொடுப்பவராக இருக்க விரும்பினால் ஒன்றாக இணைந்து வருவதற்கான வழியைக் கண்டறிய வேண்டும். களத்திற்கு வெளியே இந்தியா – பாகிஸ்தான் எவ்வளவு பெரிய போட்டி வாய்ந்தது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது”

- Advertisement -

ஹோல்டர் கோரிக்கை:

“ஆனால் மாற்றம் நடக்க வேண்டுமெனில் அது கிரிக்கெட்டின் களத்தில் துவங்க வேண்டும். இந்தியா மற்றும் பாகிஸ்தான் விளையாட்டில் ஒன்றாக வருவதன் வாயிலாக பல்வேறு விஷயங்களை மிருதுவாக்க முடியும். முதலில் அது விளையாட்டு அளவில் சாத்தியமானால், நாளடைவில் அது ஒவ்வொருவரின் வாழ்விலும் சாத்தியமாகும். கிரிக்கெட்டில் விளையாடும் தங்களுடைய ஹீரோக்கள் அப்படி செய்வதை பார்த்தால் அது மக்களிடமும் தாக்கத்தை உண்டாக்கும்”

இதையும் படிங்க: இந்த அடி போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா? உ.கோ, சாம்சன் இடத்தை சூர்யவன்சி நிரப்புவாரு.. அஸ்வின்

“அதனாலேயே விளையாட்டில் இப்படிப்பட்ட விஷயங்களை பார்ப்பது சோகமான ஒன்றாகும். இந்தியா – பாகிஸ்தான் அழகான நாடுகள். அவர்களது மக்கள் சிறந்த கலாச்சாரத்தைக் கொண்டவர்கள். இருப்பினும் கிரிக்கெட்டின் களத்தில் இப்படிப்பட்ட நிகழ்வுகள் வலியை கொடுக்கிறது. நாம் விளையாட்டில் ஒற்றுமையுடன் வளர்வதைப் பற்றி பேசுகிறோம். எனவே மற்றவைகளை விட்டுவிட்டு கிரிக்கெட்டில் ஒன்றாக வந்து ஆரோக்கியமான உறவுகளைக் கட்டமைக்க வேண்டும்” என்று கூறினார்.

Advertisement