சும்மா அவர் டீம்ல எதுக்கு இருக்காரு? அதுக்கு பேசாம ருதுராஜை செலக்ட் பண்ணிருக்கலாம்.. பத்ரிநாத் அதிருப்தி

Subramaniam Badrinath
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூஸிலாந்துக்கு எதிராக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியிலிருந்து ருதுராஜ் கெய்க்வாட் கழற்றி விடப்பட்டது நிறைய ரசிகர்களை அதிருப்தியடைய வைத்தது. ஏனெனில் 2022இல் ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான அவருக்கு இந்திய அணியில் எப்போதுமே நிலையான வாய்ப்புகள் கிடைப்பதில்லை.

இருப்பினும் மனம் தளராத அவர் போராடி கடந்த நியூசிலாந்து தொடரில் கம்பேக் கொடுத்தார். அந்த வாய்ப்பில் 2வது போட்டியில் விராட் கோலியுடன் இணைந்து அசத்திய அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதமடித்தார். அத்துடன் 2025/26 விஜய் ஹசாரே கோப்பையிலும் மகாராஷ்டிரா அணியின் கேப்டனாக சதமடித்த அவர் நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

ருதுராஜை ஏன் சேர்க்கல:

இருப்பினும் அவருக்கு அடுத்ததாக நடைபெறும் நியூஸிலாந்து தொடரில் பெஞ்சில் அமரும் வாய்ப்பு கூட கிடைக்கவில்லை. குறிப்பாக காயமடைந்திருந்த ஸ்ரேயாஸ் ஐயர் தற்போது குணமடைந்துள்ளதால் மீண்டும் துணைஜ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதனால் வேறு வழியின்றி ருதுராஜ் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று நம்பப்படுகிறது.

இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் ஆல் ரவுண்டர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அது போக 8வது இடத்தில் விளையாடும் பவுலருக்கு கணிசமாக பேட்டிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக கௌதம் கம்பீர் தொடர்ச்சியாக ஹர்ஷித் ராணாவுக்கு வாய்ப்பளித்து வருகிறார். எனவே வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் நிதிஷ் ரெட்டி எதற்காக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்? என்று முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

- Advertisement -

பத்ரிநாத் விமர்சனம்:

அதற்கு பேசாமல் ருதுராஜை தேர்ந்தெடுத்திருக்கலாம் என்று கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் ஆகிய 2 ஆல் ரவுண்டர்களுடன் நிதீஷ் குமார் இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் எதற்காக அவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதற்கான ஐடியா எனக்கு இல்லை. நிதிஷ் ரெட்டி ஆல்ரவுண்டர் என்று அவர்கள் சொல்வார்கள்”

இதையும் படிங்க: 500 விக்கெட்ஸ் எடுத்த ஷமியின் கேரியர் இன்னும் முடியல.. இதை செஞ்சா கம்பேக் நிச்சயம்.. பதான் அட்வைஸ்

“ஆனால் பந்து வீச்சில் அவர் அனைத்து பக்கங்களிலும் அடி வாங்குகிறார். ருதுராஜ் கெய்க்வாட் கடினமாக விளையாடி வந்துள்ளார். இருப்பினும் அவருக்கு ஏன் அணையில் இடமில்லை? நிதிஷ் ரெட்டி அணியில் ஏன் இருக்கிறார்? அங்கே இந்திய அணியின் தேர்வில் நிலைத்தன்மை இல்லை. மற்றபடி இந்திய அணியின் தேர்வு ஓரளவு நன்றாக இருக்கிறது. ஆனால் ருதுராஜ்க்கு மேலே நிதிஷ் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டது மட்டுமே ஒரு கவலைக்குரிய தேர்வாக இருக்கிறது” என்று கூறினார்.

Advertisement