இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது நடைபெறவுள்ளது. பத்தாவது முறையாக நடைபெற இருக்கும் இந்த ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருப்பதினால் எந்த அணி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகிறது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
அரையிறுதிக்கு செல்லப்போகும் 4 அணிகள் : ஹர்பஜன் சிங் கணிப்பு
இந்த டி20 உலக கோப்பை தொடரில் 20 அணிகள் பங்கேற்க இருப்பதினால் நான்கு பிரிவுகளாக 5 அணிகள் பிரிக்கப்பட்டு லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெறும் என்றும் அதன்பின்னர் அடுத்தடுத்த சுற்று ஆட்டங்கள் நடைபெறும் என்கிற வகையில் ஏற்கனவே இந்த தொடருக்கான அட்டவணை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டது.
இந்த 2026 டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி நடப்பு சாம்பியனாக பங்கேற்க இருக்கிறது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இவ்வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஹர்பஜன் சிங் இந்த 2026 டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகள் எவை? என்பது குறித்த தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது : என்னை பொறுத்தவரை இம்முறை 2026 டி20 உலககோப்பை தொடரை கைப்பற்ற இந்திய அணிக்கு மிக அதிகமான வாய்ப்பு இருக்கிறது.
ஏனெனில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி சூரியகுமார் யாதவின் தலைமையில் மிக பலம் வாய்ந்த அணியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சொந்த மண்ணில் விளையாடுவது இந்திய அணிக்கு கூடுதல் சாதகம். என்ன தான் உலகக்கோப்பை பிரஷர் இருந்தாலும் சொந்த மண்ணில் போட்டிகள் நடைபெறும் போது நமக்கு சாதகமாக ரசிகர்களின் ஆதரவும் இருக்கும் என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
இதையும் படிங்க : இன்னும் 25 ரன்கள் போதும்.. சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை முறியடிக்க காத்திருக்கும் – விராட் கோலி
மேலும் இந்திய அணியை தவிர்த்து ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்று தெரிவித்துள்ளார். இப்படி ஹர்பஜன் சிங் கூறிய கணிப்பின் படி இந்தியா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய 4 அணிகள் டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதி செல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.



