இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றாலும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். எதிர்வரும் 2027 ஒருநாள் உலக கோப்பை தொடரை வெல்ல வேண்டும் என்பதே தனது அடுத்த இலக்கு என்று கூறி அந்த பயணத்தில் தொடர்ந்து உழைத்து வருகிறார்.
சச்சினின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி :
ஏற்கனவே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்களின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் பங்கேற்று விளையாட இருக்கிறார்.
இந்நிலையில் இந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் முதல் போட்டியின் போது விராட் கோலி ஒரு மாபெரும் உலக சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் விராட் கோலி நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
இதுவரை இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் 308 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடியுள்ள அவர் 14557 ரன்களை குவித்துள்ளார். அதேபோன்று 123 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 9230 ரன்களை குவித்துள்ளார். மேலும் 125 டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 4188 ரன்கள் குவித்துள்ளார். இப்படி மூன்று வகையான போட்டிகளிலும் இந்திய அணிக்காக 27975 ரன்களை அவர் அடித்துள்ளார்.
இன்னும் விராட் கோலிக்கு 28000 ரன்களை பூர்த்தி செய்ய 25 ரன்கள் மட்டுமே தேவை. அப்படி 25 ரன்களை அவர் அடுத்த போட்டியில் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையையும் அவர் முறியடிக்க காத்திருக்கிறார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச போட்டியில் தனது 644-வது இன்னிங்ஸின் போது தான் 28000 ரன்களை தொட்டிருந்தார்.
இதையும் படிங்க : ஒரு திறமையான வீரருக்கு இப்படி நடப்பது அவமானம்.. சர்பராஸ் கான் விடயத்தில் நிர்வாகத்தை கடிந்த – திலீப் வெங்சர்க்கார்
ஆனால் தற்போது விராட் கோலி 623 இன்னிங்ஸ்களிலேயே 27975 ரன்களை குவித்துள்ளதால் அடுத்த போட்டியில் அவர் 28000 ரன்களை பூர்த்தி செய்யும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரை விட 20 இன்னிங்ஸ்கள் குறைவாக 28000 ரன்களை சர்வதேச போட்டிகளில் பூர்த்தி செய்த வீரர் என்ற உலக சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.



