2.4 ஓவரில் 43 ரன்ஸ்.. போதும் வெளியே போங்க.. ஆஸியில் அப்ரிடியை வெளியேற்றிய அம்பயர்.. நடந்தது என்ன?

Shaheen Afridi
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் பிக்பேஷ் 2025/26 டி20 கிரிக்கெட் தொடரில் டிசம்பர் 15ஆம் தேதி ஃகிலோங் மைதானத்தில் நடைபெற்ற 2வது போட்டி நடைபெற்றது. அதில் மெல்போர்ன் ரெனிகேட்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் மோதின. அப்போட்டியில் பிரிஸ்பேன் அணிக்காக பாகிஸ்தானை சேர்ந்த நட்சத்திர வீரர் ஷாஹீன் அப்ரிடி அறிமுகமாக விளையாடியது அந்நாட்டு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை உண்டாக்கியது.

அந்த சூழ்நிலையில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து விளையாடிய மெல்போர்ன் 20 ஓவரில் 212/5 ரன்கள் குவித்து அசத்தியது. அதிகபட்சமாக டிம் ஃசைபர்ட் அதிரடியான சதமடித்து 102 (56), ஓலிவர் பீக் 57 (29) ரன்கள் எடுத்தனர். பிரிஸ்பேனுக்கு அதிகபட்சமாக ஜேக் வில்டர்முத் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

- Advertisement -

அப்ரிடி சொதப்பல்:

அடுத்த விளையாடிய பிரிஸ்பேன் முடிந்தளவு போராடியும் 20 ஓவரில் 198/8 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைச் சந்தித்தது. அதிகபட்சமாக கோலின் முன்ரோ 55 (32), ஹுக் வெப்கென் 38* (20), ஜிம்மி பெர்சன் 50 (22) ரன்கள் எடுத்தும் தோல்வியைத் தவிர்க்க முடியவில்லை. அதனால் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மெல்போர்னுக்கு அதிகபட்சமாக கேப்டன் வில் சதர்லேண்ட் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

முன்னதாக அப்போட்டியில் முதலில் பந்து வீசிய பிரிஸ்பேன் அணிக்கு ஷாஹீன் அப்ரிடி தனது அறிமுக போட்டியிலேயே மோசமாக பந்து வீசினார். அதைப் பயன்படுத்திய மெல்போர்ன் பேட்ஸ்மேன்கள் அவரை அடித்து நொறுக்கி ரன்கள் குவித்தார்கள். குறிப்பாக 18வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் கொடுத்த அப்ரிடி 2வது பதில் சிங்கிள் கொடுத்தார். 3வது பந்தை அவர் தலைக்கு மேலே அவர் நோ-பாலாக போட்டதால் நடுவர் ஃபிரீ ஹிட் வழங்கினார்.

- Advertisement -

வெளியேற்றிய அம்பயர்:

அதற்காக வீசப்பட்ட மறுப் பந்தில் சிங்கிள் கொடுத்த அப்ரிடி 4வது பந்தில் மீண்டும் தலைக்கு மேலே நோ-பால் போட்டார். பின்னர் 4வது பந்தில் சிங்கிள் கொடுத்த அவர் 5வது பந்தில் மீண்டும் தலைக்கு மேலே நோ-பால் போட்டார். அதனால் “நீங்கள் பவுலிங் செய்தது போதும் வெளியே போங்க” என்று சொன்ன நடுவர் அப்ரிடியை பந்து வீசுவதிலிருந்து வெளியேற்றினார். அப்போது அங்கே வந்த பிரிஸ்பேன் அணியின் கேப்டன் நாதன் மெக்ஸ்வீனி பந்தை சரியாக பிடிக்க முடியாததால் அப்ரிடி தெரியாதத்தனமாக நோ-பால் போட்டதாக நடுவரிடம் பேசினார்.

இதையும் படிங்க: அவசர அவசரமாக வீடு திரும்பிய பும்ரா கடைசி 2 போட்டியில் விளையாடுவாரா? – வெளியான தகவல்

இருப்பினும் அதை நடுவர் ஏற்றுக்கொள்ளாததால் எஞ்சிய 2 பந்துகளை மெக்ஸ்வீனி போட்டு ஓவரை முடித்தார். ஏனெனில் ஒரு ஓவரில் 2 நோ-பாலுக்கு மேல் போடும் பவுலர்கள் மேற்கொண்டு பந்து வீச முடியாது விதிமுறையாகும். அதனால் 2.4 ஓவருடன் வெளியேறிய அப்ரிடி 43 ரன்களை வாரி வழங்கி அறிமுக பிக்பேஷ் போட்டியிலேயே சொதப்பியது குறிப்பிடத்தக்கது.

Advertisement