இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் முதன்மை வேகப்பந்து வீச்சாளராக இடம் பிடித்திருந்தார். அந்த வகையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற முதல் இரண்டு போட்டியிலும் பங்கேற்று விளையாடியிருந்த அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தார்.
ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசி 2 போட்டியில் விளையாடுவாரா? :
ஆனால் டிசம்பர் 14-ஆம் தேதி நேற்று தரம்சாலா நகரில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது இடம் பிடிக்கவில்லை. அதனால் அந்த போட்டியில் அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு இருக்கிறதோ என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மூன்றாவது போட்டியில் தனிப்பட்ட காரணங்களால் ஜஸ்ப்ரீத் பும்ரா தனிப்பட்ட காரணங்களால் அணியில் இருந்து விலகியதாக கேப்டன் சூரியகுமார் யாதவ் தெரிவித்திருந்தார்.
இப்படி முதல் இரண்டு போட்டிகளில் விளையாடி விட்டு திடீரென மூன்றாவது போட்டிக்கு முன்னர் இந்திய அணியில் இருந்து வெளியேறிய அவர் அவசர அவசரமாக வீடு திரும்ப என்ன காரணம்? என்பது குறித்த கேள்விகளும் ரசிகர்கள் மத்தியில் எழுந்திருந்தன.
அதோடு இந்த தொடரின் எஞ்சியுள்ள நான்காவது மற்றும் ஐந்தாவது ஆட்டங்களில் அவர் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகமும் பலரது மத்தியிலும் அதிகரித்திருந்தது. இந்நிலையில் ஜஸ்ப்ரீத் பும்ரா கடைசி இரண்டு போட்டியில் விளையாடுவாரா? மாட்டாரா? அவர் இந்திய அணிக்கு எப்போது திரும்புவார்? என்பது குறித்த சில அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளன.
அந்த வகையில் வெளியான தகவலில் குறிப்பிடப்பட்டதாவது : ஜஸ்ப்ரீத் பும்ராவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மருத்துவமனையில் மோசமான உடல்நிலை காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் இருக்கவே ஜஸ்ப்ரீத் பும்ரா வீடு திரும்பியிருப்பதாக கூறப்படுகிறது. ஆனாலும் அந்த குடும்ப உறுப்பினர் யார்? என்பது குறித்த தெளிவான தகவல் வெளியிடப்படவில்லை.
இதையும் படிங்க : தெ.ஆ அணிக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் – என்ன நடந்தது?
அதோடு இந்திய அணி விளையாட இருக்கும் கடைசி இரண்டு போட்டிகளை விட தனது குடும்ப உறுப்பினரின் உடல்நிலை தான் முக்கியம் என்பதனால் அவர்களது உடல் நிலையை பொறுத்தே இந்திய அணிக்கு பும்ரா திரும்புவது குறித்து முடிவெடுப்பார் என்றும் கூறப்படுகிறது. அதனால் கடைசி 2 போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்றே தெரிகிறது.



