தெ.ஆ அணிக்கு எதிரான கடைசி 2 டி20 போட்டியில் இருந்து விலகிய இந்திய வீரர் – என்ன நடந்தது?

IND
- Advertisement -

சூரியகுமார் யாதவ் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது தற்போது தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் மூன்று ஆட்டங்கள் முடிவடைந்த வேளையில் அதில் இரண்டு வெற்றிகளை பெற்றுள்ள இந்திய அணி இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் இந்த தொடரின் தற்போதைய நிலையில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் :

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயுள்ள எஞ்சிய இரண்டு ஆட்டங்கள் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன. அந்த வகையில் டிசம்பர் 17-ஆம் தேதி லக்னோ மைதானத்தில் நான்காவது டி20 போட்டியும், டிசம்பர் 19-ஆம் தேதி அகமதாபாத்தில் ஐந்தாவது டி20 போட்டியும் அடுத்தடுத்து நடைபெற இருக்கின்றன.

- Advertisement -

இந்த தொடரின் முடிவை தீர்மானிக்கும் இரண்டு போட்டிகள் அடுத்தடுத்து நடைபெற இருப்பதால் இந்த தொடரானது மேலும் சுவாரஸ்யமான கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இந்த தொடரில் இன்னும் இரண்டு ஆட்டங்கள் எஞ்சியிருக்கும் வேளையில் எஞ்சியுள்ள அந்த இரண்டு போட்டிகளிலும் நட்சத்திர வீரரான அக்சர் பட்டேல் விளையாட மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு எஞ்சியுள்ள இந்த தொடரில் இருந்து அவர் விலகி உள்ளதாகவும் பிசிசிஐ தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அந்த வகையில் தரம்சாலாவில் நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியின் போது காய்ச்சலால் விளையாடாத அவர் எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் அதே காரணத்தால் இந்திய அணியில் இருந்து விலகுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இதன் காரணமாக அவருக்கு தற்போது சரியான ஓய்வு தேவை என்றும் மருத்துவ சிகிச்சைக்காக அவர் சொந்த ஊருக்கு திரும்பி இருக்கலாம் என்றும் தெரிகிறது. இருந்தாலும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக ஏற்கனவே வாஷிங்டன் சுந்தர் அணியில் இருப்பதனால் அவர் விலகியுள்ளது இந்திய அணியில் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாத வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : என்ன நடந்தாலும் அவங்க 2 பேரையும் இந்திய அணி கழட்டிவிட வாய்ப்பு இல்ல – ஷான் பொல்லாக் கருத்து

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக தரம்சாலா நகரில் நடைபெற்ற இரண்டவது டி20 போட்டியில் 3 ஆம் இடத்தில் களமிறங்கி 21 ரன்களை மட்டுமே குவித்து ஆட்டமிழந்த அவர்மீது கடுமையான விமர்சனங்கள் இருந்த வேளையில் அவருக்கு பதிலாக 3 ஆவது டி20 போட்டியில் குல்தீப் யாதவ் விளையாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement