இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற்ற முதலாவது டி20 போட்டியின் போது டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்த ஆட்டம் இழந்தாலும் பின் வரிசையில் நிதானமாக விளையாடியது மட்டுமின்றி தேவையானபோது அதிரடியான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி அரைசதம் கடந்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இதன் காரணமாக முதல் டி20 போட்டிக்கான ஆட்டநாயகன் விருதும் அவருக்கு வழங்கப்பட்டது.
இரண்டாவது போட்டியில் பாண்டியா தடுமாறியது ஏன்? : இர்பான் பதான்
காயத்திற்கு பிறகு மீண்டும் கம்பேக் கொடுத்த ஹர்திக் பாண்டியா முதல் போட்டியிலேயே அதிரடியில் அசர வைத்தது பலரது மத்தியிலும் பாராட்டுகளை பெற்றிருந்தது. இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியின் போது 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கினை துரத்துகையில் 23 பந்துகளை சந்தித்து ஒரு சிக்சரை மட்டுமே அடித்து 20 ரன்கள் அடித்து ஏமாற்றம் அளித்திருந்தார்.
இப்படி முதல் போட்டியில் அதிரடியாக விளையாடிய ஹார்டிக் பாண்டியா இரண்டாவது போட்டியின் போது பேட்டிங் செய்ய தடுமாறியது பலரது மத்தியிலும் கவனிக்கப்படும் விடயமாக மாறியிருந்தது. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியா இரண்டாவது போட்டியின் போது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்த தடுமாறியது ஏன்? என்பது குறித்த சில கருத்துக்களை இந்திய அணியின் முன்னாள் வீரரான இர்பான் பதான் பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் அவர் குறிப்பிட்டதாவது : டி20 போட்டிகளை பொறுத்தவரை எப்பொழுதுமே அது ஒரு அற்புதமான சவாலாக இருந்து வருகிறது. ஒரு நாளுக்கு முன்னதாக வேற மைதானத்தில் விளையாடி இருந்த ஹார்டிக் பாண்டியா மிகவும் அதிரடியாக ஆடியிருந்தார். அதே ஒருநாள் கழித்து மீண்டும் வேறொரு மைதானத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சற்று கூடுதல் சாதகம் இருந்த வேளையில் அந்த மைதானத்தில் அவரால் அதிரடியாக பேட்டிங் செய்ய முடியவில்லை.
இதற்கு காரணம் மைதானத்தில் உள்ள பவுன்ஸ் மற்றும் வேகத்தை அவரால் கணிக்க முடியவில்லை. அதேபோன்று பவுன்ஸ் மற்றும் வேகம் ஆகியவை மைதானத்திற்கு மைதானம் மாறுபடும் போது கால் நகர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட வேண்டும்.
இதையும் படிங்க : ஷிவம் துபேவை எதுக்கு அந்த இடத்தில் யூஸ் பண்றீங்க.. அது சுத்த வேஸ்ட் – ஆகாஷ் சோப்ரா விளாசல்
முதல் போட்டியில் நின்ற இடத்தில் இருந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா இரண்டாவது போட்டியிலும் அதேபோன்று விளையாட ஆசைப்பட்டு ரன் குவிக்க முடியாமல் சென்றார். மைதானத்திற்கு ஏற்ப கால் நகர்வுகளை சரியாக பயன்படுத்தி இருந்தால் நிச்சயம் இரண்டாவது போட்டியிலும் அவரால் அதிரடியை வெளிப்படுத்தியிருக்க முடியும் என்றும் இர்பான் பதான் சுட்டிக்காட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



