இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்ற இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியின் போது 214 ரன்கள் என்கிற கடினமான இலக்கினை துரத்திய இந்திய அணியானது 162 ரன்களுக்கு சுருண்டதால் 51 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி தோல்வியை சந்தித்திருந்தது. ஏற்கனவே நடைபெற்ற முதலாவது போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணியானது இந்த இரண்டாவது போட்டியில் தோல்வியை சந்தித்தது.
ஷிவம் துபே இறங்கிய இடம் மிகவும் தவறானது : ஆகாஷ் சோப்ரா
அதன் காரணமாக இந்த தொடரானது தற்போதைய நிலையில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது. இந்த இரண்டாவது போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க மிக முக்கியமான காரணமாக அணியில் டாப் ஆர்டர் வீரர்கள் சரியாக பேட்டிங் செய்ததே காரணமாக பார்க்கப்படுகிறது.
அதோடு ஆல்ரவுண்டரான அக்சர் பட்டேல் மூன்றாம் இடத்தில் களமிறங்கியதும் பெரியளவில் பேசப்படும் விடயமாக மாறியிருந்தது. ஏனெனில் மூன்றாவது வீரராக களமிறங்கிய அக்சர் பட்டேல் 21 பந்துகளில் 21 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார். அதேவேளையில் இந்திய அணியில் பவர் ஹிட்டராக பார்க்கப்படும் ஷிவம் துபே கடைசியாக எட்டாவது இடத்தில் களமிறங்கியதும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா கூறுகையில் : இந்திய அணியின் பவர் ஹிட்டரான ஷிவம் துபேவை எதற்கு எட்டாவது இடத்தில் 13 பந்துகள் மட்டுமே இருக்கும்போது களமிறக்க வேண்டும் என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
ஏனெனில் அக்சர் பட்டேல் முன்கூட்டியே விளையாடி 21 பந்துகளில் 21 ரன்களை மட்டுமே அடித்த வேளையில் ஷிவம் துபேவை எதற்காக அணியில் சேர்த்து வைத்திருக்க வேண்டும். ஸ்பின்னர்களை அடித்து விளையாடும் வீரராக பார்க்கப்படும் ஷிவம் துபே இறுதியில் 13 பந்துகள் மட்டுமே இருந்தபோது களமிறங்கி என்ன பயன் இருக்கிறது.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை வரை கேப்டன்சி தாங்காது.. சூரியகுமார் யாதவின் பதவி குறித்து – ஆகாஷ் சோப்ரா கருத்து
214 ரன்கள் என்ற பெரிய இலக்கு இருக்கும்போது ஷிவம் துபே முன்கூட்டியே களமிறங்கி இருந்தால் அவரது அதிரடியான ஆட்டம் காரணமாக ஏதாவது மாறியிருக்கலாம். ஆனால் அதை விடுத்து அவருக்கு பதிலாக அக்சர் பட்டேலை முன்னதாக களமிறக்கி பின்னால் ஷிவம் துபேவை இறக்குவதெல்லாம் தேவையற்ற ஒன்று என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.



