ஹைதராபாத் டீம்ல பாத்துருக்கேன்.. பெரிய விக்கெட்டான அபிஷேக் அதிரடிக்கு இதான் காரணம்.. மார்க்ரம் பேட்டி

Aiden Markram
- Advertisement -

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் டிசம்பர் 9ஆம் தேதி துவங்குகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 25 வருடங்கள் கழித்து இந்தியாவை சொந்த மண்ணில் தென்னாப்பிரிக்கா தோற்கடித்தது. அதற்கு அடுத்து நடைபெற்ற ஒருநாள் தொடரில் வென்ற இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்தது.

இதைத் தொடர்ந்து 2026 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் நோக்கத்தில் நடைபெறும் 20 ஓவர் தொடரில் வெல்லப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இம்முறை தென்னாப்பிரிக்கா அணிக்கு இந்தியாவின் அபிஷேக் சர்மா சவாலைக் கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக ஜொலிக்கும் அவர் 2025ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் 100 சிக்ஸர்கள் அடித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -

ஹைதராபாத்தில் அபிஷேக்கை தெரியும்:

கடந்த 2025 ஆசியக் கோப்பை, ஆஸ்திரேலியா தொடர்களில் சிறப்பாக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிகளில் பங்காற்றினார். இந்நிலையில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஐபிஎல் அணிக்காக விளையாடியதிலிருந்தே அபிஷேக்கின் திறமைப் பற்றி தமக்குத் தெரியும் என்று தெனனாப்பிரிக்கா கேப்டன் ஐடன் மார்க்ரம் தெரிவித்துள்ளார். முதல் பந்திலிருந்தே அடியுங்கள் என்று இந்திய அணி கொடுத்த ஆதரவே அவருடைய அதிரடிக்கு காரணமாக இருக்கலாம் என்றும் மார்க்ரம் கூறியுள்ளார்.

எனவே அவருடைய பெரிய விக்கெட்டை எடுப்பது தங்களுடைய வெற்றிக்கு முக்கியமாக இருக்கும் என்றும் மார்க்ரம் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “ஏற்கனவே அபியுடன் நான் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் விளையாடியுள்ளேன். சிறந்த பையனான அவர் நன்றாக பேட்டிங் செய்வார். எனவே அவருடைய விக்கெட் எங்களுக்கு பெரியது என்பதில் சந்தேகமில்லை”

- Advertisement -

பெரிய விக்கெட்:

“எங்கள் அணியில் புதிய பந்தை எடுக்கும் யாராக இருந்தாலும் அவருடைய சவாலை எதிர்கொண்டு ஆரம்பத்திலேயே அவுட்டாக்குவார்கள் என்று நம்புகிறேன். மேட்ச் வின்னரான அவருடைய விக்கெட் எங்களுக்கு முக்கியம். அவருடைய அதிரடிக்கு பயமற்றத்தன்மை மற்றும் முதல் பந்திலிருந்தே அடித்து நொறுக்குவதற்கான உரிமத்தைப் பெற்றிருப்பது காரணமாக இருக்கலாம்”

இதையும் படிங்க: 16 விக்கெட்ஸ்.. அகர்கர் வார்த்தைகளை பொய்யாக்கிய ஷமி.. கம்பேக் போராட்டத்தில் பிரசித், ராணாவை விட பெஸ்ட்

“இப்போதெல்லாம் இளம் வீரர்கள் இயற்கையாகவே அதிரடியாக விளையாடுகிறார்கள். ஏனெனில் அது பொழுதுபோக்கு. மேலும் அது டி20 லீக் தொடரில் விளையாடுவதற்கான வாய்ப்பைப் பெற்றுத் தருகிறது. ஏலத்தில் அனைவரையும் கவர்வதற்காகவும் அப்படி சிலர் அதிரடியாக விளையாட விரும்புகிறார்கள். ஆனால் அது மட்டும் காரணமல்ல. பொதுவாக ஒரு அணி அசத்தும் போது வீரர்களும் பயனடையுவார்கள் என்பது போனஸாகும்” என்று கூறினார்.

Advertisement