விராட் கோலிக்கு இது ஒரு ஹேபிட்.. அதனால் தான் ஈஸியா செஞ்சுரி அடிக்குறாரு – சேவாக் புகழாரம்

Sehwag and Kohli
- Advertisement -

இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி ஏற்கனவே டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற வேளையில் தொடர்ச்சியாக ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். மேலும் 2027 ஒருநாள் உலககோப்பை கிரிக்கெட் தொடர் வரை தான் விளையாட விரும்புவதாகவும் தெரிவித்த அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

சதம் அடிப்பது விராட் கோலிக்கு ஒரு பொழுதுபோக்கு : வீரேந்தர் சேவாக்

உள்ளூர் போட்டிகளில் அவர் விளையாடவில்லை என்றாலும் சர்வதேச போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் குறிப்பாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராஞ்சி நகரில் நடைபெற்ற முதலாவது போட்டியின் போது அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி அந்தப் போட்டியில் சதம் அடித்தது மட்டுமின்றி நேற்று தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது போட்டியிலும் சதமடித்து அசத்தியிருந்தார்.

- Advertisement -

இப்படி முதல் இரண்டு போட்டியிலும் சதம் அடித்த அவர் தான் மிகச் சிறப்பான ஃபார்மில் உள்ளதை வெளிகாட்டியுள்ளார். நேற்றைய போட்டியில் அவர் அடித்த இந்த சதம் ஒருநாள் போட்டிகளில் அவரது 53-வது சதமாக பதிவாகிய வேளையில் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 11 முறை அவர் அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்து சாதனையையும் நிகழ்த்தி இருந்தார்.

நேற்றைய இந்த இன்னிங்ஸ் மூலம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திய விராட் கோலி இன்னும் சில ஆண்டுகள் விளையாடும் பட்சத்தில் 90-க்கும் மேற்பட்ட சதங்களை நோக்கி செல்வார் என்றும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாமெல்லாம் சதம் அடிப்பதை பற்றி பேசிக்கொண்டிருக்கும் வேளையில் விராட் கோலி அதனை அசால்டாக அடிப்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் சேவாக் புகழ்ந்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : விராட் கோலிக்கு 100 ரன்கள் (செஞ்சுரி) அடிப்பது மீது ஒரு விதமான போதை இருக்கிறது. அதனால் தான் நாம் சதங்களை பற்றி எண்ணிக்கொண்டிருக்கும் நேரத்தில் அவர் அசால்டாக சதத்தை அடித்து நொறுத்துகிறார்.

இதையும் படிங்க : இந்தியா இப்படி மோசமா தோக்க அவர் இல்லாதது தான் காரணம்.. நிர்வாகம் செய்த தவறை – விளாசிய ஹர்பஜன் சிங்

அவருக்கு சதம் அடிப்பது ஒரு பழக்கமாகவே மாறிவிட்டது. அதனால் தொடர்ந்து அவர் மிக சிறப்பாக விளையாடுகிறார். விராட் கோலி போட்டியில் இருந்தால் நிச்சயம் எதுவும் சாத்தியம் என்றுதான் நான் கூறுவேன் என வீரேந்திர சேவாக் அவரை பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Advertisement