இந்தியா இப்படி மோசமா தோக்க அவர் இல்லாதது தான் காரணம்.. நிர்வாகம் செய்த தவறை – விளாசிய ஹர்பஜன் சிங்

Harbhajan and Shami
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை இழந்த இந்திய அணியானது தற்போது அந்த அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 349 ரன்களை குவித்தும் 17 ரன்கள் வித்தியாசத்தில் மட்டுமே போராடி வெற்றி பெற்றிருந்தது.

இந்திய அவர் ஏன் இல்லை.. அவரை தேர்வு செய்யுங்க : ஹர்பஜன் சிங்

அதற்கடுத்து ராய்ப்பூர் நகரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 358 ரன்கள் குவித்த போதும் தென்னாப்பிரிக்க அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அந்த மாபெரும் இலக்கை செய்து அசத்தலான வெற்றி பெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்திக்க சரியான பந்துவீச்சு யூனிட் இல்லாததே காரணம் என்று பல்வேறு முன்னாள் வீரர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இல்லாததும் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம் என ஹர்பஜன் சிங் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : இந்திய அணியில் ஜஸ்ப்ரீத் பும்ரா இல்லாத போது வெற்றி பெற்று தரக்கூடிய ஒரு பந்துவீச்சாளரை நாம் அணியில் வைத்திருக்க வேண்டும்.

முகமது ஷமி எங்கே? அவர் ஏன் இந்த தொடரில் விளையாடவில்லை? என்று எனக்கு தெரியவில்லை. நம்மிடம் பிரசித் கிருஷ்ணா இருந்தாலும் அவர் தற்போது தான் படிப்படியாக முன்னேற்றம் கண்டு கொண்டிருக்கிறார். எனவே அவர் கற்றுக்கொள்ள வேண்டிய விடயம் நிறைய இருக்கிறது. ஆனால் அனுபவ வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இருந்திருந்தால் இளம் வீரர்களை வைத்து பந்துவீச்சு யூனிட்டை மிகச் சிறப்பாக வழிநடத்தி இருப்பார்.

- Advertisement -

ஜஸ்ப்ரீத் பும்ரா அனைத்து போட்டியிலும் விளையாடுவார் என்று நாம் உறுதியாக நம்ப முடியாது. எனவே அவருக்கு அடுத்து நல்ல அனுபவம் மிகுந்த வீரராக பார்க்கப்படும் முகமது ஷமி இன்னும் சில ஆண்டுகள் இந்திய அணிக்காக விளையாட வைத்தால் நன்றாக இருக்கும் என்றும் ஹர்பஜன் சிங் கூறியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : 415 விக்கெட்ஸ்.. வாசிம் அக்ரம் வாழ்நாள் உலக சாதனையை உடைத்த மிட்சேல் ஸ்டார்க்.. புதிய வரலாற்று சாதனை

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி போட்டியானது நாளை மறுதினம் டிசம்பர் 6-ஆம் தேதி விசாகப்பட்டினம் மைதானத்தில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement