167 ரன்கள் வெற்றிக்கு போதும்னு எங்களுக்கு தெரியும்.. வெற்றிக்கான எங்களோட பிளான் இதுதான் – ஷிவம் துபே பேட்டி

Shivam Dube
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது இன்று கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற மூன்று ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்தன. அதனால் இந்த நான்காவது போட்டியானது இரு அணிகளுக்குமே மிக முக்கியமான போட்டியாக இருந்தது.

வெற்றிக்கான எங்களது திட்டம் இதுதான் : ஷிவம் துபே

இந்நிலையில் இன்று நடைபெற்று முடிந்த இந்த நான்காவது டி20 போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது 48 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான கடைசி போட்டி நவம்பர் 8-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருக்கிறது.

- Advertisement -

இன்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியானது 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவிக்க பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணியானது 119 ரன்களுக்கே ஆல் அவுட்டானதனால் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் மிகச் சிறப்பான பங்களிப்பை வழங்கிய ஷிவம் துபே 2 ஓவர்கள் பந்துவீசி 20 ரன்களை விட்டுக்கொடுத்து முக்கியமான 2 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசியிருந்த ஷிவம் துபே இந்த 167 ரன்கள் எங்களது வெற்றிக்கு போதும் என்று நினைத்ததாக தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : உண்மையிலேயே இந்த போட்டியில் நாங்கள் முதலில் பேட்டிங் செய்து 167 ரன்கள் அடித்த போதே இந்த மைதானத்தில் இந்த ரன்கள் வெற்றிக்கு போதும் என்று நினைத்தோம். ஏனெனில் இந்த பெரிய மைதானத்தில் 168 ரன்களை அடிப்பது சாதாரணமாக இருக்காது என்று உணர்ந்தோம். அதுமட்டுமின்றி இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர்கள் சுழற்பந்து வீச்சாளர்கள் என தரமான பவுலர்கள் உள்ளனர்.

எனவே எங்களது அணியின் பந்துவீச்சாளர்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தது. டி20 போட்டிகளின் போது பேட்ஸ்மேன்கள் வந்ததும் அடிக்கவே நினைப்பார்கள். ஆனால் இதுபோன்ற பெரிய பவுண்டரி எல்லை உடைய மைதானத்தில் வந்ததும் அடிப்பது என்பது சாதாரண விடயம் கிடையாது. மேலும் இந்த போட்டியில் வெற்றிக்கான எங்களது திட்டம் யாதெனில் : பந்துவீசும் போது எந்த திசையில் பவுண்டரி லைன் பெரியதாகவும், தூரமாகவும் இருக்கிறதோ அந்த திசையை நோக்கியே பந்துவீச நினைத்தோம்.

இதையும் படிங்க : என்னங்க இப்படி பண்ணிடீங்க? 4 ரன்னில் மாபெரும் சாதனையை தவறவிட்ட திலக் வர்மா – விவரம் இதோ

அந்த பிளான் எங்களது வெற்றிக்கான காரணமாகவும் மாறியது. நான் என்னுடைய பந்துவீச்சில் கடினமாக உழைத்து வருகிறேன். இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல், கேப்டன் சூரியகுமார் யாதவ் ஆகியோர் எனது பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்கள் வைத்துள்ள நம்பிக்கையே என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கு காரணம் என்றும் ஷிவம் துபே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement