ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் மூன்று ஆட்டங்களின் முடிவில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியினை பெற்று இந்த தொடரில் ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமநிலையில் இருந்த வேளையில் இன்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான நான்காவது டி20 போட்டியானது கோல்டு கோஸ்ட் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
4 ரன்னில் சாதனையை தவறவிட்ட திலக் வர்மா :
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 167 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக துவக்க வீரர் சுப்மன் கில் 46 ரன்களையும், அபிஷேக் சர்மா 28 ரன்களையும் குவித்தனர்.
ஆஸ்திரேலியா அணி சார்பாக நாதன் எல்லிஸ் மற்றும் ஆடம் ஜாம்பா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். அதனை தொடர்ந்து 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலியா அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 119 ரன்களை மட்டுமே குவித்தது.
இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும், அக்சர் பட்டேல் மற்றும் ஷிவம் துபே ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றியனர். அதன் காரணமாக இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் முன்னிலை வகித்துள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக ஐந்தாவது வீரராக களமிறங்கிய திலக் வர்மா இன்றைய போட்டியில் 6 பந்துகளை மட்டுமே சந்தித்து 5 ரன்களில் ஆட்டமிழந்தார். ஒருவேளை அவர் இந்த போட்டியில் 9 ரன்கள் அடித்திருந்தால் சர்வதேச டி20 போட்டிகளில் 12வது வீரராக 1000 ரன்களை பூர்த்தி செய்த வீரர் என்ற சாதனையை நிகழ்த்தி இருப்பார்.
இதையும் படிங்க : வேணும்னே இப்படி பண்றாங்க.. முகமது ஷமியின் நீக்கம் குறித்து வருத்தம் தெரிவித்த – அவரது கோச்
ஆனால் இந்த போட்டியில் அவர் 5 ரன்கள் மட்டுமே அடித்ததால் 4 ரன்கள் வித்தியாசத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் மாபெரும் சாதனை ஒன்றினை தவற விட்டுள்ளார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நவம்பர் 8-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் நடைபெற இருக்கும் இறுதி போட்டியில் அவர் நிச்சயம் இந்த சாதனையை எட்டிப் பிடிப்பார் என்று நம்பலாம்.



