இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவிருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தில் முதலாவதாக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரானது நாளை மறுதினம் அக்டோபர் 19-ஆம் தேதி பெர்த் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இந்திய வீரர்கள் ஏற்கனவே அங்கு சென்றடைந்து பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுப்மன் கில் இந்த தொடரில் நிறைய கற்றுக்கொள்வார் : அக்சர் பட்டேல்
இந்த ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய ஒருநாள் அணி அறிவிக்கப்பட்ட போது கேப்டன் ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக டெஸ்ட் அணியின் கேப்டனான சுப்மன் கில்லுக்கு ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முதன்முறையாக ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியை அவர் தலைமை தாங்க காத்திருக்கிறார்.
அனுபவ கேப்டனான ரோகித் சர்மா பதவி நீக்கம் செய்யப்பட்டு புதிய கேப்டனாக சும்மன்கில் இந்த தொடரில் செயல்பட இருப்பதினால் இந்த தொடரில் அவரது கேப்டன்சி எவ்வாறு இருக்கப்போகிறது என்பது குறித்த எதிர்பார்ப்பும் அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது. அதோடு விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் 7 மாதங்களுக்குப் பின்னர் இந்திய அணியில் விளையாட இருப்பதாலும் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.
இந்நிலையில் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டனாக முதல் முறையாக செயல்பட இருக்கும் சுப்மன் கில் இந்தத் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரது வழிகாட்டுதலின் கீழ் இன்னும் கேப்டன்சியை கற்றுக் கொள்வார் என இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான அக்சர் பட்டேல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : சுப்மன் கில்லிற்கு தற்போது ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் அணியில் இருப்பது மிகப்பெரிய பலம். அவர்கள் இருவருமே அனுபவம் வாய்ந்த கேப்டன்கள் அதனால் அவர்களிடம் இருக்கும் அனுபவத்தை நிச்சயம் சுப்மன் கில்லுக்கு வழங்குவார்கள். இது சுப்மன் கில் கேப்டனாக வளர மிகப்பெரிய அளவில் உதவும்.
இதையும் படிங்க : இப்போவே சொல்றது ரொம்ப கஷ்டம்.. 2027 வேர்லடுகப்ல ரோஹித் மற்றும் கோலி ஆடுவார்களா? – அஜித் அகார்கர் பதில்
உலகத்தரம் வாய்ந்த வீரர்களான அவர்கள் இருவரும் எத்தனையோ அழுத்தமான சூழல்களை தொழில்முறை வீரர்களாக பார்த்து வந்திருப்பார்கள். அதனால் அவர்களிடம் இருக்கும் அனைத்து அனுபவத்தையும் கில்லுக்கு வழங்குவார்கள் என்று நினைக்கிறேன். ஆஸ்திரேலியா மைதானத்தில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் விளையாட இருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அக்சர் படேல் கூறியது குறிப்பிடத்தக்கது.



