இப்போவே சொல்றது ரொம்ப கஷ்டம்.. 2027 வேர்லடுகப்ல ரோஹித் மற்றும் கோலி ஆடுவார்களா? – அஜித் அகார்கர் பதில்

Agarkar and RoKo
- Advertisement -

இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் சர்வதேச டி20 மற்றும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற பின்னர் ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக 2027 ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் 50 ஓவர் உலககோப்பை தொடர் வரை விளையாட விருப்பம் தெரிவித்துள்ள அவர்கள் அந்த தொடர் முடிந்ததும் ஒட்டுமொத்தமாக ஓய்வை அறிவிப்பார்கள் என்று தெரிகிறது.

அவர்களது இடம் குறித்து இப்போதே எதுவும் சொல்ல முடியாது : அஜித் அகார்கர்

ஏற்கனவே கடந்த ஓர் ஆண்டில் டி20 உலககோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களை ஒன்றாக இணைந்து வென்ற அவர்கள் 2027 உலககோப்பையையும் கைப்பற்றி விட்டு ஒன்றாக அணியில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் இருவரும் அடுத்த உலககோப்பை வரை விளையாடுவது கடினம் என்றே தெரிகிறது.

- Advertisement -

ஏனெனில் இளம் வீரர்களுக்கு வழி கொடுக்கும் நோக்கில் நிர்வாகம் அவர்கள் இருவரையும் புறக்கணிக்கலாம் என்று தெரிகிறது. இதனால் அவர்கள் இருவரும் 2027 ஒருநாள் உலககோப்பை தொடரில் விளையாடுவார்களா? என்ற கேள்வி அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது. இந்நிலையில் அதற்கு பதில் கொடுக்கும் விதமாக இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகார்கர் சில விளக்கங்களை கொடுத்துள்ளார்.

அந்தவகையில் அவர் கூறியதாவது : தற்போதைக்கு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர்கள் இருவருமே இடம் பிடித்துள்ளார்கள். அவர்கள் அற்புதமாக பிளேயர்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அதற்காக மட்டுமே அவர்களை தக்கவைக்க முடியாது. இன்னும் உலககோப்பைக்கு இரண்டு வருடம் இருக்கிறது. அதனால் இப்போதே எதையும் எங்களால் உறுதியாக கூற முடியாது. இளம் வீரர்கள் அவர்களது இடத்தினை பிடிக்க காத்திருக்கிறார்கள்.

- Advertisement -

அவர்கள் இருவருமே திறமையான வீரர்கள் தான். அதானல் இனி வரும் போட்டிகளில் அவர்கள் ரன்களை அடிக்கிறார்களா? கோப்பையை வெல்கிறார்களா? என எந்தவொரு சோதனையும் அவர்களுக்கு நாங்கள் வைக்க மாட்டோம். இந்திய அணிக்கு எது தேவையோ அதை மட்டுமே யோசிப்போம். அதனால் எதைப்பற்றியும் யோசிக்காமல் அவர்கள் விளையாடலாம்.

இதையும் படிங்க : அங்க விளையாடுங்கன்னு சொல்லியும்.. விராட், ரோஹித் தானா ரிட்டையராகி போனாங்க.. அகர்கர் பேட்டி

இந்திய அணிக்காக இத்தனை ஆண்டுகாலம் அவர்கள் இருவருமே மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர். ஜாம்பவான் வீரர்களான அவர்களை உரிய மரியாதையுடன் கையாள்வோம் என அகார்கர் தெரிவித்துள்ளார். அஜித் அகார்கர் கூறியதை வைத்து பார்க்கும் போது நிச்சயம் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் தாக்குப்பிடிப்பது கடினம் என்றே தெரிகிறது.

Advertisement