இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் சமீப காலங்களாக நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வருகிறார். 2023 உலகக் கோப்பையில் 500+ ரன்கள் அடித்த அவர் இந்தியா ஃபைனல் செல்ல தம்முடைய பங்காற்றினார். 2024 ஐபிஎல் தொடரில் கேப்டனாக அசத்திய அவர் கொல்கத்தா 10 வருடங்கள் கழித்து சாம்பியன் பட்டம் வெல்ல முக்கிய பங்காற்றினார்.
ஆனால் அடுத்த வருடமே அவரை தக்க வைக்காமல் கொல்கத்தா அணி நிர்வாகம் கழற்றி விட்டது அனைவரையும் ஆசிரியப்படுத்தியது. அடுத்ததாக 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் அதிக ரன்கள் குவித்த ஸ்ரேயாஸ் ஐயர் இந்தியா 12 வருடங்கள் கழித்து கோப்பையை வெல்ல உதவினார். அப்படியே 2025 ஐபிஎல் பஞ்சாப்பை அபாரமாக வழி நடத்திய அவர் 11 வருடங்கள் ஃபைனல் அழைத்துச் சென்றார்.
பஞ்சாப் மாதிரி இல்ல:
அத்தொடரில் பேட்டிங்கில் 604 ரன்களை 175 ஸ்ட்ரைக் ரேட்டில் வெளுத்து வாங்கிய அவருக்கு 2025 ஆசியக் கோப்பையில் ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் கூட இடம் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் 2024 ஐபிஎல் கோப்பையை அவர் கேப்டனாக வென்ற கொல்கத்தா அணியில் ஆலோசகராக இருந்த கௌதம் கம்பீர் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளராக இருக்கிறார். அப்படி இருந்தும் கௌதம் கம்பீர் அவரை ஆசியக் கோப்பையில் கழற்றி விட்டது வேறு கதை.
இந்நிலையில் கொல்கத்தா அணியில் பேட்ஸ்மேனாகவும் வீரராகவும் தமக்கு போதுமான சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். அதனாலேயே கொல்கத்தா அணியிலிருந்து வெளியேறியதாக கூறும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கேப்டன் மற்றும் வீரராக என்னால் நிறைய கொடுக்க முடியும். அதற்கு பயிற்சியாளர்கள், நிர்வாகம், வீரர்கள் ஆகியோரிடம் இருந்து எனக்குத் தேவையான அனைத்து ஆதரவையும் பஞ்சாப் அணி கொடுத்தது”
வெளியேறிய காரணம்
“அதன் காரணமாக என்னால் அணி மீட்டிங்கில் பங்காற்ற முடிந்தது. அத்துடன் களத்திலும் களத்திற்கு வெளியேயும் முடிவுகளை எடுக்க முடிந்தது. கொல்கத்தா அணியை பொறுத்த வரை பேச்சுவார்த்தைகளில் நானும் அங்கமாக இருந்தேன். ஆனால் அந்த கலவையில் நான் முழுமையாக இல்லை. இந்த நிலைக்கு வருவதற்காக நான் தனியாக உழைக்க வேண்டியிருந்தது” என்று கூறினார்.
இதையும் படிங்க: என்னை பச்சோந்தியா மாற வெச்ச தோனி.. வாய்ப்புக்காக தமிழ்நாட்டில் இதெல்லாம் செய்ய வெச்சாரு.. டிகே பேட்டி
இதைத் தொடர்ந்து இந்தியா ஏ அணி ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 2 உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அந்தப் போட்டிகளுக்கான இந்தியா ஏ அணி கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அப்போட்டிகள் செப்டம்பர் 16, 23 தேதிகளில் லக்னோவில் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.



