என்னை பச்சோந்தியா மாற வெச்ச தோனி.. வாய்ப்புக்காக தமிழ்நாட்டில் இதெல்லாம் செய்ய வெச்சாரு.. டிகே பேட்டி

Dinesh karthik 3
- Advertisement -

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் 2002ஆம் ஆண்டு இந்தியாவுக்காக அறிமுகமாகி கீப்பிங் செய்வதில் அசத்தினார். ஆனால் 2004இல் அறிமுகமான எம்எஸ் தோனி அவரை விட பேட்டிங்கில் அதிரடியாக விளையாடி கீப்பிங் செய்வதிலும் மின்னல் வேகத்தில் செயல்பட்டார். அதற்கிடையே கேப்டனாக 3 விதமான ஐசிசி கோப்பைகளை வென்ற அவர் ஓய்வு பெறும் வரை நிரந்தர விக்கெட் கீப்பராக விளையாடினார்.

மறுபுறம் தினேஷ் கார்த்திக் கீப்பிங்கில் அசத்தினாலும் பேட்டிங்கில் 2019 உலகக் கோப்பை செமி ஃபைனல் உட்பட கிடைத்த வாய்ப்புகளில் முக்கிய நேரங்களில் அசத்தவில்லை. அதனால் இந்திய அணியில் எந்த இடம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று போராடும் அளவுக்கு தோனி தம்மை பச்சோந்தியாக மாற்றியதாக கார்த்திக் கூறியுள்ளார். அந்த வகையில் தோனியால் தாம் நிறைய கற்றுக் கொண்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

பச்சோந்தியாக மாற்றிய தோனி:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “தோனியை போன்றவர் வித்தியாசமாகவும் சிறப்பாகவும் செயல்படும் போது நீங்கள் “நம்முடைய சிறந்த ஆட்டத்தை வெளிக்கொண்டு வர என்ன செய்ய வேண்டும்” என்று உங்களுக்குள் நீங்களே கேட்டாக வேண்டும். அந்த வகையில் நான் கொஞ்சம் பச்சோந்தியாக மாறினேன். குறிப்பாக ஓப்பனிங் இடம் காலியாக இருந்தால் அதைப் பிடிப்பதற்காக தமிழ்நாடு அணிக்கு சென்று சார் நான் ஓப்பனிங்கில் விளையாடட்டுமா? என்று கேட்பேன்”

“அப்போது தான் என்னால் உள்ளூரில் ரன்கள் அடித்து இந்திய அணியில் ஓப்பனிங் இடத்தை பிடிக்க முடியும். அதே போல இந்திய அணியில் மிடில் ஆர்டரில் இடம் காலியாக இருந்தால் தமிழ்நாட்டுக்கு சென்று அங்கே விளையாடுவதற்கான கோரிக்கையை வைப்பேன். இந்த வழியில் எப்போதும் நான் இந்திய அணிக்குள் செல்வதற்காக முயற்சித்தேன். ஆனால் இந்திய அணியில் எனக்கான இடத்தை தக்க வைப்பதே எனக்கான பெரிய சவாலாக இருந்தது”

- Advertisement -

போராடிய கார்த்திக்:

“அதற்காக பல தருணங்களில் என் மேல் நானே நிறைய அழுத்தத்தை போட்டுள்ளேன். ஆனால் உண்மையில் தேவைப்பட்டதற்காக நான் நியாயயாம செயல்படவில்லை. அந்தப் பயணத்தில் உங்கள் மேலே எது வீசப்பட்டாலும் அதற்குத் தகுந்தார் போல் உங்களை தழுவிக்கொள்ள வேண்டும் என்பதை கற்றுக் கொண்டேன். அதற்கு மீள்தன்மை மற்றும் தீர்மானமாக இருத்தல் ஆகியவை முக்கியமாக தேவைப்பட்டது”

இதையும் படிங்க: ஆசிய கோப்பை தொடரில் ஷிவம் துபேவிற்கு மிகப்பெரிய ரோல் இருக்கு.. ஹின்ட் கொடுத்த – மோர்னே மோர்கல்

“பெரும்பாலான வீரர்களுக்கு அசௌகரியமாக இருக்கக்கூடிய விஷயங்களை நான் தொடர்ச்சியாக செய்தேன். எடுத்துக்காட்டாக என்னுடைய கேரியரின் கடைசி 5 வருடங்களில் 6, 7வது இடங்களில் பேட்டிங் செய்தேன். அந்த பாத்திரத்தை ஏற்றுக்கொண்ட நான் வெற்றி பெற எனது பலத்தைப் பயன்படுத்தினேன். இந்த வகைகளில் எம்எஸ் தோனி எனக்கு நேரடியாக அல்லாமல் ஆழமாக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வழிகளில் நிறைய கற்றுக் கொடுத்தார்” என்று கூறினார்.

Advertisement