நீ தான் உண்மையான ஹீரோ.. 2009 போல இளம் வீரருக்கு சாம்சன் நெகிழ்ச்சி பரிசு.. கம்பீர் கவனித்து வாய்பளிப்பாரா?

Sanju Samson
- Advertisement -

கேரளா பிரீமியர் லீக் டி20 2025 கிரிக்கெட் தொடர் அம்மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. அத்தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடைபெற்ற 22வது போட்டியில் அலப்பி அணியை கொச்சி அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய அலப்பி 20 ஓவரில் 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது.

அதிகபட்சமாக கேப்டன் முகமது அசாருதீன் 64 (43), ஜலஜ் சக்சேனா 71 (42) ரன்கள் எடுத்தனர். அடுத்து விளையாடிய கொச்சிக்கு நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு சாம்சன் அதிரடியாக பேட்டிங் செய்து ரன்களை குவித்தார். ஏற்கனவே இத்தொடரில் சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் இப்போட்டியில் 2 பவுண்டரி 9 சிக்ஸருடன் 83 (41) ரன்களை 202.44 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசி அசத்தினார்.

- Advertisement -

நெகிழ்ச்சியான செயல்:

அவருடன் விளையாடிய மனோகரன் 23 (11) ரன்கள் எடுத்தார். ஆனால் மிடில் ஆர்டரில் முகமது சாணு 0, நிகில் தொட்டா 18, அஜீஸ் 18, கேப்டன் சாலி சாம்சன் 1, ஜோபின் ஜோபி 1 என முக்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட்டானார்கள். அதனால் கொச்சி அணியின் வெற்றி கேள்விக்குறியான போது லோயர் மிடில் ஆர்டரில் 23 வயது இளம் வீரர் ஜெரின் அதிரடியாக விளையாடினார்.

கடைசி நேரத்தில் தில்லாக விளையாடிய அவர் ஒரு பவுண்டரி 2 சிக்ஸருடன் 25* (13) ரன்கள் குவித்து ஃபினிஷிங் கொடுத்தார். அவருடன் அப்ரத் நாசர் 3* (3) ரன்கள் எடுத்ததால் 18.3 ஓவரிலேயே 178/7 ரன்களை எடுத்த கொச்சி தங்களுடைய 6வது வெற்றியைப் பதிவு செய்தது. அந்த வெற்றிக்கு 83 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

- Advertisement -

கம்பீர் கவனிப்பாரா:

ஏற்கனவே இத்தொடரில் 2 முறை ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் அதை ஜெரினுக்கு பரிசாக கொடுத்தார். குறிப்பாக பேட்டிங்கில் 25* ரன்கள் எடுத்த ஜெரின் பந்து வீச்சில் 2 விக்கெட்டுகள் எடுத்து ஆல் ரவுண்டராக வெற்றியில் பங்காற்றினார். எனவே “தம்மை விட நீதான் இப்போட்டியின் உண்மையான நாயகன்” என்ற வகையில் அவருக்கு தமது ஆட்டநாயகன் விருதை சாம்சன் பரிசாக வழங்கியது ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது.

இதையும் படிங்க: இந்திய அணியின் சைன்டிஸ்ட் அஸ்வின் சிஎஸ்கே தாண்டி செட்டாகல.. அண்டர்ரேட்டட் பேட்ஸ்மேன்.. பாராட்டிய ஏபிடி

2009ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 150 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்த கௌதம் கம்பீர் ஆட்டநாயகன் விருது வென்றார். அதே போட்டியில் தனது முதல் சதத்தை அடித்த இளம் விராட் கோலிக்கு தன்னுடைய ஆட்டநாயகன் விருதை கம்பீர் பரிசளித்தார். தற்போது அதே போன்ற செயலை செய்துள்ள சாம்சனை 2025 ஆசிய கோப்பையில் சுப்மன் கில்லுக்காக கழற்றி விட கம்பீர் தயாராகியுள்ளார். எனவே கில்லை விட டி20 கிரிக்கெட்டில் திறமையான சம்சானின் ஃபார்மையும் பரந்த மனதையும் கௌதம் கம்பீர் கவனித்து வாய்ப்பளிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

Advertisement