இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக செயல்பட்டு வந்த ரவிச்சந்திரன் அஸ்வின் கடந்த வருடம் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்றார். தற்போது ஐபிஎல் தொடரிலும் விடை பெறுவதாக அறிவித்துள்ள அவர் இனிமேல் வெளிநாட்டு டி20 தொடர்களில் விளையாட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த அவருக்கு ஏராளமான முன்னாள் இந்நாள் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்தார்கள்.
அந்த வரிசையில் இணைந்துள்ள தென்னாப்பிரிக்க ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கிரிக்கெட்டின் சைன்டிஸ்ட் மற்றும் டாக்டர் என்று பாராட்டியுள்ளார். ஏனெனில் மன்கட் செய்வது நேர்மறைக்கு புறம்பானதாக பார்க்கப்பட்டது. ஆனால் அதை ஐபிஎல் தொடரில் தைரியமாக செய்த அஸ்வின் அனைத்து பவுலர்களும் பயமின்றி எதிர்ப்புறம் பேட்ஸ்மேன்களை ரன் அவுட் செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
சைன்டிஸ்ட் அஸ்வின்:
நாளடைவில் அஸ்வினுடைய வாதத்தில் நியாயம் இருந்ததால் மன்கட் செய்தலை ஐசிசி அதிகாரப்பூர்வமான ரன் அவுட்டாக விதிமுறையை மாற்றி அறிவித்தது. அந்தளவுக்கு கிரிக்கெட்டை ஆழமாக பேசக்கூடிய அஸ்வினுக்கு சிஎஸ்கே தவிர்த்து மற்ற ஐபிஎல் அணிகள் பொருந்தவில்லை என்று டீ வில்லியர்ஸ் கூறியுள்ளார். இது பற்றி தன்னுடைய யூடியூப் பக்கத்தில் அவர் பேசியது பின்வருமாறு.
“நட்சத்திர கேரியர். என்ன ஒரு அற்புதமான பிளேயர் என்று அவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் விளையாட்டின் என்ன ஒரு சிறந்த சயின்டிஸ்ட், டாக்டர், பேராசிரியர். அவர் எப்போதும் விதிமுறை புத்தகத்தின் வரம்புக்கு எடுத்துச் சென்றார். கொஞ்சம் கோபப்பட்டாலும் அவர் அதை சரியாக புரிந்து கொண்டார். விளையாட்டைப் படிக்கும் தோழர்கள் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. அவர் அத்தகைய கிரிக்கெட்டர்களில் ஒருவர்”
ஏபிடி பாராட்டு:
“மிகவும் திறமையான அவர் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய நட்சத்திர வீரர். இந்தியா மற்றும் சிஎஸ்கே அணிக்காக அவர் நிறையப் போட்டிகளை வென்று கொடுத்துள்ளார். மற்ற ஐபிஎல் அணிகளில் விளையாடிய போது அவர் செட்டிலானது போல் நான் உணரவில்லை. எனது கருத்துப்படி அவர் எப்போதும் சிஎஸ்கே அணியிலேயே இருந்திருக்க வேண்டும். ஆனால் அது அவருடைய கையில் இல்லை”
இதையும் படிங்க: 30 சிக்ஸ் 186 ஸ்ட்ரைக் ரேட்.. கெளதம் கம்பீருக்கு பெரிய தொல்லையை கொடுக்கும் சாம்சன்.. கில்லுக்கு போட்டி
“இருப்பினும் நான் அவரை எப்போதும் மஞ்சள் நிற ஜெர்சியில் விளையாடிய வீரராகவே நினைவு கொள்வேன். அதே போல பேட்டிங்கில் அவர் அண்டர்ரேட்டட் கைகளைக் கொண்டுள்ளார். பேட்டிங்கில் அவர் வெளிப்படுத்திய கேரக்டர் பற்றி அதிகம் பேசப்படவில்லை. பெரும்பாலும் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தடுமாறிய சமயங்களில் அவர் வந்து நிலைமைகளை சரி செய்தவர்” என்று கூறினார்.



