30 சிக்ஸ் 186 ஸ்ட்ரைக் ரேட்.. கெளதம் கம்பீருக்கு பெரிய தொல்லையை கொடுக்கும் சாம்சன்.. கில்லுக்கு போட்டி

Sanju Samson
- Advertisement -

கேரள பிரிமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் ஆகஸ்ட் 31ஆம் தேதி திருவனந்தபுரத்தில் 22வது லீக் போட்டி நடைபெற்றது. அதில் கொச்சி ப்ளூ டைகர்ஸ் மற்றும் அலப்பி ரிப்பல்ஸ் அணிகள் மோதின. அப்போட்டியில் டாஸ் வென்ற கொச்சி முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்ததைத் தொடர்ந்து களமிறங்கிய அலப்பி 20 ஓவரில் 176/6 ரன்கள் எடுத்தது.

அதிகபட்சமாக கேப்டன் முகமது அசாருதீன் 64 (43), ஜலஜ் சக்சேனா 71 (42) ரன்கள் எடுத்த நிலையில் கொச்சிக்கு அதிகபட்சமாக ஆசிப் 3, ஜெரின் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். அடுத்து விளையாடிய கொச்சி அதிரடியாக விளையாடி 18.2 ஓவரில் 178/7 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.

- Advertisement -

4 போட்டிகளில் 30 சிக்ஸ்:

அந்த அணிக்கு ஓப்பனிங்கில் களமிறங்கிய நம்பிக்கை நட்சத்திரம் சஞ்சு சாம்சன் அடித்து நொறுக்கும் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஏற்கனவே இத்தொடரில் சதத்தை அடித்து நல்ல ஃபார்மில் இருக்கும் அவர் 2 பவுண்டரி 9 சிக்ஸருடன் 83 (41) ரன்களை 202.44 ஸ்ட்ரைக் ரேட்டில் விளாசினார். அவருடன் ஜெரின் 25* (13), வினுப் மனோகரன் 23 (11) ரன்கள் எடுத்து வெற்றியில் பங்காற்றினர்.

அந்த அணியின் வெற்றிக்கு 82 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சாம்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார். இத்தொடரில் ஆரம்பம் முதலே அசத்தி வரும் அவர் இதுவரை 121, 89, 62, 83 என தொடர்ச்சியாக பெரிய ரன்கள் குவித்து வரும் அவர் மொத்தம் 368* ரன்களை 186.80 ஸ்ட்ரைக் ரேட்டில் அடித்துள்ளார். அத்துடன் 4 போட்டிகளில் அவர் 30 சிஸ்கர்களை பறக்க விட்டு உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

கம்பீருக்கு தொல்லை:

இந்திய அணியில் மிடில் ஆர்டரில் தடுமாறிக் கொண்டிருந்த அவரை புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்ற கௌதம் கம்பீர் ஓப்பனிங்கில் களமிறக்கினார். அந்த வாய்ப்பில் மிரட்டலாக விளையாடிய சாம்சன் 3 சதங்கள் அடித்து ஒருவழியாக இந்திய அணியில் தமக்கென்று நிலையான இடத்தைப் இப்படித்தார். ஆனால் தற்போது அதே கௌதம் கம்பீர் 2025 ஆசியக் கோப்பையில் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக தேர்ந்தெடுத்துள்ளார்.

இதையும் படிங்க: அதுக்கு ஓகே சொல்லாத ராகுல் டிராவிட்டை.. ராஜஸ்தான் அணி வலுக்கட்டாயமா நீக்கிட்டாங்க.. ஏபிடி கணிப்பு

துணைக் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சுப்மன் கில் உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அபிஷேக் ஷர்மாவுடன் ஓப்பனிங்கில் விளையாடுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் சஞ்சு சாம்சன் பெஞ்சில் அமர்வதற்கான வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது. ஆனாலும் கேரள தொடரில் மிரட்டலாக பேட்டிங் செய்து வரும் சாம்சன் 2025 ஆசியக் கோப்பையில் சுப்மன் கில்லுக்கு போட்டியாக தம்மை கழற்றி விட முடியாத அளவுக்கு கம்பீருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்.

Advertisement