எந்த பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடிக்க பிடிக்கும்? சுவாரசியமான பதிலை அளித்த – ரோஹித் சர்மா

Rohit Sharma
- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரராக முதலிடத்தில் இருக்கிறார். இதுவரை மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளிலும் சேர்த்து 637 சிக்ஸர்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சிக்சர்களை அடித்த வீரர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 553 சிக்ஸர்களுடன் கிரிஸ் கெயில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

எந்த பவுலருக்கு எதிராக சிக்ஸர் அடிக்க பிடிக்கும்? :

சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை 93 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ள ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் 140 ஸ்ட்ரைக் ரேட்டுடன் விளையாடியுள்ளார். அதிலும் குறிப்பாக எந்த ஒரு பவுலருக்கு எதிராகவும் சிக்ஸர் அடிக்கும் ரோஹித் சர்மா உலகில் உள்ள அனைத்து மைதானங்களிலும் நட்சத்திர பந்துவீச்சாளர்கள் எதிராகவும் சிக்ஸர் அடித்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பிரத்யேக நிகழ்ச்சியில் எந்த பவுலருக்கு எதிராக சிக்சர் அடிக்க பிடிக்கும்? என்ற கேள்வி அவருக்கு எதிராக எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ரோஹித் சர்மா கூறியதாவது :

எனக்கு எதிராக எந்தவொரு பவுலர் பந்துவீசினாலும் அவருக்கு எதிராக நான் ஆதிக்கம் செலுத்தி விளையாடுவதையே விரும்புவேன். ஒரு குறிப்பிட்ட பவுலரை அட்டாக் செய்து விளையாட வேண்டும் என்பது என்னுடைய எண்ணம் கிடையாது. எனக்கு எதிராக யார் பந்துவீசினாலும் அவர்களுக்கு எதிராக அதிரடியாக விளையாடி அவர்கள் மீது அழுத்தவும் போடுவதே என்னுடைய வழி.

- Advertisement -

எனவே நான் எனக்கு எதிராக எந்த பவுலர் பந்து வீசினாலும் அவர்களுக்கு எதிராக சிக்சர் அடிக்க விரும்புவேன் என்ற சுவாரசியமான பதிலை ரோகித் சர்மா அளித்திருந்தார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியிருந்த ரோஹித் சர்மா 15 போட்டிகளில் 22 சிக்ஸர்களோடு 418 ரன்கள் குவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாக்கிஸ்தான் மேட்ச்ல.. என் மதத்தை வெச்சு கிண்டல் பண்ணாங்க.. நாட்டுக்காக விதிவிலக்கு இருக்கு.. ஷமி பதிலடி

ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பையை வென்ற கையோடு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வுபெற்ற அவர் சாம்பியன்ஸ் டிராபி முடிந்த கையோடு டெஸ்ட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்தார். இருப்பினும் 2027 ஒருநாள் உலககோப்பை வரை ஒருநாள் போட்டிகளில் விளையாட விரும்புவதாக ரோஹித் சர்மா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement