பாக்கிஸ்தான் மேட்ச்ல.. என் மதத்தை வெச்சு கிண்டல் பண்ணாங்க.. நாட்டுக்காக விதிவிலக்கு இருக்கு.. ஷமி பதிலடி

Mohammed Shami 3
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக அறியப்படுகிறார். 2023 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த அவர் இந்தியா ஃபைனல் செல்வதற்கு முக்கிய பங்காற்றினார். 2025 சாம்பியன்ஸ் ட்ராபியில் பும்ரா இல்லாத சூழ்நிலையில் முதன்மை பவுலராக விளையாடிய அவர் இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

இந்நிலையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய போட்டிகளில் தம்முடைய மதத்தை வைத்து பலரும் சமூக வலைதளங்களில் கிண்டலடித்ததாக முகமது ஷமி தெரிவித்துள்ளார். அத்துடன் ரமலான் நோன்பு விரதம் சமயங்களில் இந்தியாவுக்காக விளையாடியதாக ஷமி கூறியுள்ளார். அப்போது இடைவெளிகளில் உணவு மற்றும் தண்ணீர் அருந்தியதற்காக தம்முடைய மதத்தைச் சேர்ந்தவர்களே தம்மை விமர்சித்ததாகவும் ஷமி கூறியுள்ளார்.

- Advertisement -

மதத்தை வைத்து கிண்டல்:

ஆனால் தங்களுடைய மதத்திலும் நாட்டுக்காக விளையாடும் போது விரதத்தை தாண்டி தண்ணீர் குடிக்க அனுமதி உண்டு என்று ஷமி கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “சிலர் நான் முஸ்லிம் என்பதால் என்னை குறி வைத்தனர். குறிப்பாக பாகிஸ்தான் போட்டிகளுக்குப் பின் என்னை குறி வைத்தார்கள். ஆனால் அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இது போன்ற கிண்டல்களுக்கு நான் கவனம் கொடுப்பதில்லை”

“எனக்கு வேலை கொடுக்கப்பட்டுள்ளது. நான் இயந்திரம் கிடையாது. வருடம் முழுவதும் கடினமாக உழைக்கும் நான் சில நேரங்களில் தோற்பேன், சில நேரங்களில் வெற்றி காண்பேன். மற்ற அனைத்தும் மக்கள் எப்படி அதை எடுத்துக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது. நாட்டுக்காக நீங்கள் விளையாடும் போது மற்ற அனைத்தையும் மறந்து விட்டு விளையாட வேண்டும்”

- Advertisement -

ஷமி பதிலடி:

“உங்களைப் பொறுத்த வரை விக்கெட்டுகள் எடுத்து போட்டியை வெல்வதே மிகவும் முக்கியம். அது போன்ற நேரங்களில் நான் சமூக வலைதளங்களுக்கு செல்ல மாட்டேன். அங்கே நேர்மறையான எதிர்மறையான கருத்துக்கள் இருக்கும் என்பதால் நீங்கள் தள்ளியிருக்க வேண்டும். உண்மையான ரசிகர்கள் யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். உங்களுக்கு எதிர்ப்பு இருந்தால் அதை மரியாதையாக தெரிவிக்கலாம்”

இதையும் படிங்க: மனைவி டார்ச்சரால் 2018லயே ரிட்டையராக நினச்ச ஷமியை.. அவர் தான் கம்பேக் கொடுக்க வெச்சாரு.. அருண் பேட்டி

“42 – 45 டிகிரி செல்ஸியஸ் வெப்பத்தில் விளையாடும் நாங்கள் எங்களை தியாகம் செய்கிறோம். எங்களுடைய மதத்தின் விரத விதிமுறைகளில் நாட்டுக்காக அல்லது பயணிக்கும் போது விரத விதிவிலக்குகள் உள்ளன. அதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களை ரோல் மாடல்களாக பார்க்கும் மக்கள் ஒரு குறிப்பிட்ட நபர் யாருக்காக என்ன செய்கிறார் என்பதையும் பார்க்க வேண்டும். சிலர் மட்டுமே வெளிச்சத்தைப் பெறுவதற்காக அப்படி விமர்சிக்கிறார்கள். அது போன்ற கருத்துக்களை நான் சோசியல் மீடியாவில் படிப்பதில்லை” என்று கூறினார்.

Advertisement