இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் இந்திய அணி சமன் செய்தது. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற அந்தத் தொடரில் கடைசி போட்டியில் இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது காலத்துக்கும் மறக்க முடியாததாக அமைந்தது. ஒருவேளை கடைசிப் போட்டியில் தோற்று இந்தியா தொடரை இழந்திருந்தால் குல்தீப் யாதவ் விளையாடாதது முக்கிய காரணம் காரணமாக அமைந்திருக்கலாம்.
ஏனெனில் அதிரடியாக விளையாடக்கூடிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு எதிராக அவர் சிறப்பாக பவுலிங் செய்து 20 விக்கெட்டுகளை எடுக்க உதவுவார் என்பதே பலருடைய கருத்தாக இருந்தது. அதனால் அவரை விளையாட வைக்குமாறு தொடர் முழுவதும் பல முன்னாள் வீரர்கள் கேட்டுக் கொண்டார்கள். இருப்பினும் பேட்டிங் வரிசையை ஆழப்படுத்துவதற்காக அவரை எடுக்காத இந்திய அணி சுந்தர், ஜடேஜாவுக்கு வாய்ப்பு கொடுத்தது.
அசத்திய சுந்தர், ஜடேஜா:
கடைசியில் அந்த இருவருமே லோயர் ஆர்டரில் முக்கிய ரன்கள் அடித்து தொடரை சமன் செய்ய கருப்பு குதிரைகளாக செயல்பட்டார்கள். இந்நிலையில் வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா குறை சொல்ல முடியாத அளவுக்கு அசத்தியதாக ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் பாராட்டியுள்ளார். அதே சமயம் குல்தீப் விளையாடியிருந்தால் இந்தியாவுக்கு தேவையான 20 விக்கெட்டுகளை எடுக்க உதவியிருப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “குல்தீப் யாதவ் சுற்றிய பேச்சுக்கள் மாறும் என்று நான் நினைக்கவில்லை. அவர் தொடரில் எங்கேயும் விளையாடவில்லை. இத்தொடரில் அவர் இந்தியா 20 விக்கெட்டுகள் எடுப்பதற்கு உதவியிருப்பார் என்று நான் நினைக்கிறேன். அதற்காக நீங்கள் சுந்தர் மற்றும் ஜடேஜாவிடம் எதையும் எடுக்க முடியாது. பேட்டிங்கில் அவர்கள் அற்புதமாக விளையாடினார்கள்”
குல்தீப் யாதவ் மிஸ்:
“அதனால் அந்த 2 ஸ்பின்னர்களை யாரும் விமர்சிக்க முடியும் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஏற்படுத்திய தாக்கத்திற்கு விளையாடத் தகுதியானவர்கள். அவர்கள் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை இரு கைகளாலும் பிடித்துக் கொண்டனர். இருப்பினும் குல்தீப் தொடர்ச்சியாக பேசுபொருளாக இருக்கிறார். ஏனெனில் அவரிடம் துருப்புச் சீட்டு இருக்கிறது”.
இதையும் படிங்க: அபராதம் போடுங்க கவலையில்ல.. இந்தியாவுக்கு வெற்றியே முக்கியம்.. ஓவல் போட்டியில் அம்பயரை எதிர்த்த கம்பீர்
“அவர் தொடர் முழுவதும் தன்னுடைய அணிக்கு 20 விக்கெட்டுகள் எடுக்க உதவி இருக்கக்கூடும். மறுபுறம் அந்த 2 ஸ்பின்னர்களின் பேட்டிங் அண்டர்ரேட்டடாக இருக்கிறது. ஜடேஜா இருப்பதால் குல்தீப் அண்டர்ரேட்டடாக இருக்கிறார். ஜடேஜா இந்தியாவுக்காக முக்கியமான ரன்கள் அடிக்கிறார். சுந்தரும் முக்கிய ரன்களை அடித்து அரை சதத்தை அடித்தார்” என்று கூறினார்.



