அபராதம் போடுங்க கவலையில்ல.. இந்தியாவுக்கு வெற்றியே முக்கியம்.. ஓவல் போட்டியில் அம்பயரை எதிர்த்த கம்பீர்

Gautam Gambhir
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து மண்ணில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. மிகுந்த பரபரப்புக்கு மத்தியில் நடைபெற்ற அத்தொடரின் கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதனால் தோல்வியைச் சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்தியா கடைசி நாளில் 6 ரன்கள் வித்தியாசத்தில் மிராக்கள் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அந்தப் போட்டியில் இந்திய அணிக்கு 4 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளை அபராதமாக விதிப்போம் என்று நடுவர் எச்சரித்தது தெரிய வந்துள்ளது. அதாவது ஒரு டெஸ்ட் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட நேரத்திற்குள் பவுலிங் செய்து முடிக்க வேண்டும். இல்லையெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் ஏற்கனவே பெற்ற புள்ளிகளில் கணிசமான புள்ளிகள் கழிக்கப்படும்.

- Advertisement -

எச்சரித்த அம்பயர்:

அத்துடன் பவுலிங் செய்து முடிக்காத அணிக்கு போட்டியிலிருந்து கணிசமான சம்பளத் தொகை அபராதமாக விதிக்கப்படும். அந்த வகையில் ஓவல் போட்டியில் 4வது நாள் முடிவில் இந்திய அணி 6 ஓவர்கள் குறைவாக வீசியிருந்ததாக தெரிகிறது. அதனால் 5வது நாள் ஆட்டம் துவங்கிய போது வேகமாக பவுலிங் செய்து முடிக்குமாறு இந்திய அணிக்கு நடுவர் ஜெஃப் க்ரோ எச்சரிக்கை கொடுத்துள்ளார்.

அது போன்ற சூழ்நிலையில் “எப்படியும் தோல்வி உறுதியானதால் இந்தியா வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜாவை வைத்து விரைவாக பவுலிங் செய்து முடிக்க” பரிந்துரை வந்ததாக தெரிகிறது. ஆனால் அப்படி செய்திருந்தால் களத்தில் இருந்த ஜேமி ஸ்மித் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோர் ஸ்பின்னர்களை அடித்து நொறுக்கியிருப்பார்கள். ஓவர்ரேட் பிரச்சனை தீர்ந்திருந்தாலும் இந்தியா தோல்வியை சந்தித்திருக்கும்.

- Advertisement -

எதிர்த்த கம்பீர்:

எனவே நடுவரின் அந்தப் பரிந்துரையை கௌதம் கம்பீர் எதிர்த்ததாக தெரிய வருகிறது. அந்த பரிந்துரையைக் கேட்ட போது. “ஓவர்ரேட் பற்றி எனக்குக் கவலையில்லை. அதற்காக நாங்கள் 4 புள்ளிகளை அபராதமாகப் பெற்றால் பரவாயில்லை, அப்படியே இருக்கட்டும். நாங்கள் வெற்றிக்காக விளையாடுகிறோம்” என்று கம்பீர் பதிலளித்ததாக டெய்லி ஜக்ரான் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: சுப்மன் கில் எல்லை மீறியது உண்மை தான்.. ஆனாலும் இதில் அசத்திட்டாரு – தினேஷ் கார்த்திக் பாராட்டு

இறுதியில் கௌதம் கம்பீர் முடிவுப்படி இந்திய அணி ஓவர்ரேட்டை பற்றி கவலைப்படாமல் சிராஜ், பிரசித் கிருஷ்ணாவை வைத்து பவுலிங் செய்தது. இந்திய அணிக்காக 22 பந்துகளில் புதிய பந்தும் காத்திருந்தது. ஆனால் புதிய பந்தை எடுக்காத இந்தியா பழைய பந்திலேயே நெருப்பாக பவுலிங் செய்து திரில்லர் வெற்றியைப் பெற்றது. அதன் விளைவாக இந்தியா பெனால்ட்டியை தவிர்த்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement