சுப்மன் கில் எல்லை மீறியது உண்மை தான்.. ஆனாலும் இதில் அசத்திட்டாரு – தினேஷ் கார்த்திக் பாராட்டு

DK and Gill
- Advertisement -

அண்மையில் இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரை இரண்டுக்கு இரண்டு (2-2) என்ற கணக்கில் சமன் செய்து அசத்தியது. மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இம்முறை இந்து தொடரை சமன் செய்துள்ளதால் இந்திய அணிக்கு பாராட்டுக்களும் குவிந்து வருகிறது.

சுப்மன் கில்லை பாராட்டிய : தினேஷ் கார்த்திக்

குறிப்பாக இந்த தொடரில் கேப்டனாக செயல்பட்ட சுப்மன் கில் பேட்டிங்கிலும் விராட் கோலியின் நான்காவது இடத்தில் களமிறங்கி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 போட்டிகளில் ஒரு இரட்டை சதம் உட்பட நான்கு சதங்களுடன் 754 ரன்கள் குவித்து இந்த தொடரில் அதிக ரன்களை அடித்த வீரராக முதலிடத்தில் பிடித்ததோடு பல்வேறு சாதனைகளையும் இந்த தொடரில் நிகழ்த்தி இருந்தார்.

- Advertisement -

ஒரு பேட்ஸ்மேனாகவும், கேப்டனாகவும் இந்த தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய சுப்மன் கில்லுக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வரும் வேளையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கும் சுப்மன் கில்லின் சிறப்பான செயல்பாடு குறித்து பாராட்டினை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்த இங்கிலாந்து தொடரில் சுப்மன் கில் நல்ல முதிர்ச்சியையும், திறனையும் வெளிக்காட்டினார். அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் நல்ல டெக்னிக்கை வைத்திருக்கும் அவர் சில மாற்றங்களையும் கொண்டுவந்து மிகச் சிறப்பாக விளையாடியிருந்தார். இந்த தொடர் முழுவதுமே அவர் ஆக்ரோஷமாக இருந்தார். ஒரு சில இடங்களில் அவர் எல்லை மீறியது உண்மைதான்.

- Advertisement -

ஆனால் அதை அவர் விரைவில் மாற்றிக் கொள்வார் என்று நினைக்கிறேன். இந்த தொடரில் இங்கிலாந்து ஊடகங்களை அவர் மிகச்சிறப்பாக கையாண்டார். குறிப்பாக இந்த தொடர் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அவரது பார்ம் மீது சந்தேகம் இருந்த வேளையில் :

இதையும் படிங்க : கேஎல் ராகுல் மாதிரி இந்த டெக்னிக்.. 2 டீம்ல யார்கிட்டயும் இல்லை.. பொறுப்பை காட்டினாரு.. டிகே பாராட்டு

இந்த இங்கிலாந்து தொடரில் இரண்டு அணிகளிலும் சேர்த்து நான்தான் சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பேன் என்று அவர் கூறியது அவருடைய நம்பிக்கையை வெளிக்காட்டியது. அவர் கூறியது போன்று இந்த தொடரை மிகச் சிறப்பாக முடித்துள்ளார். இனிவரும் காலங்களிலும் அவர் இன்னும் அசத்துவார் என்று நம்புவதாக தினேஷ் கார்த்திக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement