இங்கிலாந்து வீரருடன் காரசார வார்த்தை மோதலில் ஈடுபட்ட ஜடேஜா.. சமாதானம் செய்த ஸ்டோக்ஸ் – என்ன நடந்தது?

Jadeja and Carse
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த ஜூலை 10-ஆம் தேதி துவங்கிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இரண்டு அணிகளுமே தங்களது முதல் இன்னிங்சில் 387 ரன்களை சரிசமமாக குவித்தது. இதன் காரணமாக இந்த முக்கியமான டெஸ்ட் போட்டியில் கூடுதல் சுவாரஸ்யம் ஏற்பட்டது.

இங்கிலாந்து வீரருடன் முதலில் ஈடுபட்ட ரவீந்திர ஜடேஜா :

அதன்பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 192 ரன்களுக்கு சுருண்டது. அதனால் 193 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கு இந்திய அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. அதனை எதிர்த்து விளையாடி வரும் இந்திய அணி நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 58 ரன்கள் குவித்திருந்தது.

- Advertisement -

அதனைத் தொடர்ந்து போட்டியின் ஐந்தாம் நாளான இன்று இந்திய அணி தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்ஸ்ஸை விளையாடி வருகிறது. ஒருபுறம் இந்திய அணி இந்த கடைசி நாள் ஆட்டத்தில் 135 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாட துவங்கியது. அதேவேளையில் மற்றொரு புறம் எஞ்சியுள்ள 6 விக்கெட்டுகளையும் வீழ்த்தினால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்ற நிலையுடன் விளையாடி வருகிறது.

இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டி தற்போது படு சுவாரஸ்யமாக நடைபெற்று வருகிறது. இன்றைய கடைசி நாள் ஆட்டத்தின் தேநீர் இடைவேளை வரை இந்திய அணியானது 9 விக்கெட்டுகளை இழந்து 163 ரன்களை குவித்திருந்தது. அதனால் இந்திய அணியின் வெற்றிக்கு இன்னும் 30 ரன்கள் தேவை என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டியின் போது ஒருபுறம் விக்கெட் விடாமல் நிலைத்து நின்று விளையாடி வரும் ஜடேஜா 56 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருக்கும் வேளையில் அவர் இன்று இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான பிரைடன் கார்ஸ்சுடன் காரசாரமான வார்த்தை மோதலில் ஈடுபட்டது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் இன்றைய போட்டியின் போது ஒரு பந்தை தட்டிவிட்ட ஜடேஜா ரன் எடுக்க மறுபுறம் நோக்கி ஓடுகையில் மைதானத்தின் குறுக்கே இங்கிலாந்து வீரர் நிற்பதை கவனிக்காமல் இடித்து விட்டார். பிரைடன் கார்ஸ்சும் ஜடேஜா ஓடி வருவதை பார்க்கவில்லை.

இதையும் படிங்க : நேரலையில் ரவி சாஸ்திரி சொல்லியும் கேட்காத சுப்மன் கில்.. பலிகெடாவான ரிஷப் பண்ட் – விவரம் இதோ

இதனால் அவர்கள் இருவருமே நேருக்கு நேராக மோதிக்கொண்டனர். பின்னர் ஜடேஜா இடித்ததும் அவரிடம் பிரைடன் காஸ்ட் ஏதோ காரசாரமாக பேசினார். உடனே ஜடேஜாவும் தனது பங்கிற்கு அவருடன் வார்த்தை முதலில் ஈடுபட மைதானத்தில் இருந்த அம்பயரும் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ்சும் வந்து அவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இன்றைய விறுவிறுப்பான போட்டிக்கு இடையே இப்படி ஒரு மோதல் நடைபெற்றதும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement