லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியானது இன்று கடைசி நாளை எட்டியுள்ளது. போட்டியின் கடைசி ஐந்தாம் நாளான இன்று ஆட்டத்தின் ஆரம்பத்தில் இந்திய அணி வெற்றி பெற 135 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அதே வேளையில் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினால் இங்கிலாந்து அணி வெற்றி பெறும் என்கிற நிலையும் இருந்தது.
ரவி சாஸ்திரி சொல்லியும் கேட்காத சுப்மன் கில் :
இதன் காரணமாக இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இந்த போட்டியின் கடைசி நாளாட்டம் அனைவரது மத்தியிலும் மிகப்பெரிய அளவு கவனத்தை ஈர்த்துள்ளதோடு தற்போது மிக சுவாரசியமாக இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
இந்நிலையில் இன்றைய கடைசி நாள் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் புதிய வீரராக களமிறங்கும் முன்னர் நேரலையில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளரான ரவி சாஸ்திரி : ரிஷப் பண்ட்டிடம் தற்போதைக்கு எந்த ஒரு அறிவுரையும் வழங்கக்கூடாது. ஏனெனில் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாடினால் நிச்சயம் அவர் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்துவார்.
ஒருவேளை அவரிடம் ஏதாவது பேசி குழப்பிவிடும் பட்சத்தில் நிச்சயம் அவர் ஏமாற்றம் அளிக்க வாய்ப்பு இருப்பதாக ரவி சாஸ்திரி குறிப்பிட்டார். அதுமட்டும் இன்றி உலகம் முழுவதும் சதம் அடித்துள்ள அவர் அனுபவம் கொண்ட வீரராகவும் இருக்கிறார். எனவே தனது பொறுப்பு என்னவென்று அவருக்கு தெரியும். அதனால் அவர் சரியான பாணியில் விளையாடுவார் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்.
ஆனால் இப்படி ரவி சாஸ்திரி பேசிக் கொண்டிருக்கும் போதே லார்ட்ஸ் மைதானத்தின் பால்கனியில் அமர்ந்திருந்த ரிஷப் பண்ட்டிடம் சுப்மன் கில் ஏதோ பேசிக் கொண்டிருந்தார். இதன் காரணமாக அவரை தடுப்பாட்டத்தில் ஈடுபட வைக்கலாம் என்று சுப்மன் கில் ஆலோசனை வழங்கியிருக்கலாம் என்று தெரிகிறது.
இதையும் படிங்க : வஷிங்க்டன் சுந்தர் மீது நிர்வாகம் வைத்திருக்கும் இந்த நம்பிக்கை சரியானது – இர்பான் பதான் கருத்து
அதன் பின்னர் மைதானத்திற்கு வந்த ரிஷப் பண்ட் ஆர்ச்சரின் பந்துவீச்சில் இரண்டு பவுண்டரிகளை அடித்து நல்ல டச்சுடன் இன்னிங்சை துவங்கினாலும் அதன் பின்னர் தடுப்பாட்டத்தில் ஈடுபட்டு போல்டாகி வெளியேறினார். ஒருவேளை சுப்மன் கில் தான் அவரை தடுப்பாட்டத்தில் ஈடுபட அறிவுறுத்தினாரோ அதன் காரணமாக அந்த விக்கெட் விழுந்து இருக்கலாமோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.



