பும்ராவை தவிர மற்ற 3 பேரும் ஒரேமாதிரி பவுலர்ஸ் தான்.. அதனால் உடனே இந்த 2 மாற்றத்தை செய்யுங்க – கிரேக் சேப்பல் கருத்து

Greg Chappell
- Advertisement -

சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லீட்ஸ் நகரில் நடைபெற்று முடிந்த முதலாவது ஆட்டத்தில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய இங்கிலாந்து அணி இந்திய அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்திய அணியின் பவுலிங் யூனிட்டில் மாற்றம் தேவை : கிரேக் சேப்பல்

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை இரண்டாம் தேதி நாளை எட்ஜ்பேஸ்டன் நகரில் துவங்க இருக்கிறது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி வெற்றியுடன் தொடரை துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்த வேளையில் முதலாவது போட்டியின் போது இந்திய அணி சிறப்பாக விளையாடியும் தோல்வியை சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்தது.

- Advertisement -

அதிலும் குறிப்பாக பேட்டிங்கில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டாலும் பீல்டிங்கில் ஏற்பட்ட மோசமான செயல்பாடே தோல்விக்கு காரணமாக அமைந்தது. அதோடு பும்ராவை தவிர்த்து மற்ற எந்தவொரு பவுலரும் பெரிய அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தாதும் இந்திய அணிக்கு பெரிய பின்னடைவை தந்தது.

இந்நிலையில் இந்திய அணியில் பும்ராவை தவிர்த்து மற்ற அனைத்து பந்துவீச்சாளர்களும் ஒரே மாதிரி பந்துவீச்சாளர்கள் தான் என்றும் எனவே இந்திய அணியில் இரண்டு மாற்றங்களை செய்தாக வேண்டும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரும், முன்னாள் இந்திய பயிற்சியாளருமான கிரேக் சேப்பல் சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைய இந்திய அணியில் பும்ரா மட்டுமே விக்கெட் டேக்கிங் பவுலராக இருக்கிறார்.

- Advertisement -

அவரை தவிர்த்து முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா மற்றும் ஷர்துல் தாகூர் ஆகியோர் ஒரே மாதிரியான பந்துகளை வீசக்கூடியவர்கள். எனவே இந்திய அணியின் பந்துவீச்சு யூனிட்டியில் வித்தியாசம் இருக்க வேண்டும் என்பதே என்னுடைய கருத்து. அந்த வகையில் பார்க்கையில் : அர்ஷ்தீப் சிங் இடதுகை வேகப்பந்து வீச்சாளர் என்பது மட்டுமின்றி பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யக் கூடியவர். அதனால் அவரை பிளேயிங் லெவனுக்குள் கொண்டு வரலாம்.

இதையும் படிங்க : அவர் பேட்டிங் பண்ண வந்தா எல்லாரும் டிவி ஆன் பண்ணி பாக்கலாம்.. பக்கா என்டர்டெயினர் – ஹாரி ப்ரூக் பேட்டி

அதேபோன்று ரவீந்திர ஜடேஜாவை காட்டிலும் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசும் குல்தீப் யாதவை அணிக்குள் கொண்டு வரலாம். அவரால் நிச்சயம் இங்கிலாந்து ஆடுகளங்களில் சிறப்பாக பந்துவீச முடியும். இப்படி இரண்டு பந்துவீச்சாளர்களை அணிக்குள் கொண்டுவரும் பட்சத்தில் இந்திய அணியின் பந்துவீச்சில் வெரைட்டி இருக்கும். அதுதான் இந்திய அணியின் பவுலிங் யூனிட்டிற்கு சரியான பேலன்ஸை தரும் என கிரேக் சேப்பல் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement