அவர் பேட்டிங் பண்ண வந்தா எல்லாரும் டிவி ஆன் பண்ணி பாக்கலாம்.. பக்கா என்டர்டெயினர் – ஹாரி ப்ரூக் பேட்டி

Harry Brook
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் டெண்டுல்கர் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது நாளை ஜூலை 2-ஆம் தேதி எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் துவங்க இருக்கிறது. இதன் காரணமாக இரு அணி வீரர்களும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதலாவது போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்று ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அவர் பேட்டிங் பண்ண வந்தா தாராளமா டிவி ஆன் பண்ணி பாக்கலாம் : ஹாரி புரூக்

இதன் காரணமாக முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பழி தீர்க்கும் விதமாக இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதேவேளையில் இந்திய அணியை மீண்டும் இந்த போட்டியில் வீழ்த்தி தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற முனைப்புடன் இங்கிலாந்து அணியும் காத்திருக்கிறது.

- Advertisement -

இதன் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த இரண்டாவது போட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நாளை நடைபெறவுள்ள இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரரான ஹாரி ப்ரூக் பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது : இந்திய அணியை பொறுத்தவரை தற்போதைய டெஸ்ட் அணியில் ரிஷப் பண்ட் ஒரு அற்புதமான பேட்ஸ்மேன். அவர் பேட்டிங் செய்யும் விதத்தை நானே மைதானத்திலிருந்து ரசித்து பார்க்கிறேன். அவர் பேட்டிங் செய்யும் விதத்தை பார்க்க கண்களுக்கு விருந்தாக இருக்கும். நிச்சயமாக ரிஷப் பண்ட் பேட்டிங் செய்யும்போது எல்லோரும் டிவியை ஆன் செய்து பார்க்கலாம்.

- Advertisement -

ஏனெனில் அவர் பேட்டிங் செய்யும்போது கண்டிப்பாக பொழுதுபோக்கு உறுதியாக இருக்கும். என்னுடைய கருத்தின் படி உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன்களில் அவரும் ஒருவர். அதேபோன்று இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளில் இருந்து நான் விலகியது ஒரு கடினமான முடிவு தான். ஏனெனில் ஐபிஎல் தொடரில் உலகில் உள்ள அனைத்து வீரர்கள் ஒன்றிணைந்து விளையாடுவார்கள்.

இதையும் படிங்க : 2வது டெஸ்ட் நடைபெறும் ராசியற்ற பர்மிங்காம் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

அதுமட்டும் இன்றி மைதானத்திற்கு வரும் கூட்டமும், போட்டி சூழலும் அற்புதமாக இருக்கும். இந்த ஆண்டு நான் ஐபிஎல் தொடரை தவறவிட்டாலும் இனிவரும் காலங்களில் விளையாட விரும்புகிறேன். இருப்பினும் எப்போதும் எனக்கு இங்கிலாந்து அணி தான் முதன்மையான ஒன்று என ஹாரி ப்ரூக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement