2வது டெஸ்ட் நடைபெறும் ராசியற்ற பர்மிங்காம் மைதானம் எப்படி? புள்ளிவிவரம், பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Birmingham Stadium
- Advertisement -

இங்கிலாந்து அணிக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. முதல் போட்டியில் 5 சதங்களை அடித்த இந்தியா நன்றாக ஃபினிஷிங் செய்ய தவறியதும், 7 கேட்ச்கள் தவற விட்டதும் தோல்வியைக் கொடுத்தது. எனவே அதிலிருந்து பாடங்களைக் கற்றுள்ள இந்திய அணி 2வது போட்டியில் வெற்றி பெறத் தயாராகியுள்ளது.

மறுபுறம் சொந்த மண்ணில் இங்கிலாந்து அணி 2வது போட்டியிலும் வென்று முன்னிலையை அதிகரிக்க தயாராக உள்ளது. அதனால் வெற்றி பெறப்போவது யார் என்று எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி துவங்குகிறது. அப்போட்டி பர்மிங்காம் நகரில் எட்ஜ்பஸ்டன் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

ராசியற்ற பர்மிங்காம்:

1882ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட அந்த மைதானத்தில் 1902 முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்ற வருகிறது. வரலாற்றில் இந்த மைதானத்தில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் மொத்தம் 8 போட்டிகளில் போட்டிகளில் விளையாடியுள்ளன. அந்த 7 வெற்றிகளைப் பெற்றுள்ள இங்கிலாந்துக்கு பர்மிங்காம் மைதானம் கோட்டையாக இருக்கிறது. ஆனால் வெற்றி பெறாமல் 7 தோல்வி, 1 ட்ராவை பதிவு செய்துள்ள இந்தியாவுக்கு அம்மைதானம் ராசியற்றதாக இருக்கிறது.

பிட்ச் ரிப்போர்ட்:

எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் முதல் நாளில் லேசான மேக மூட்டத்துடன் 20 – 30% மட்டுமே மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையம் தெரிவிக்கிறது. 2 – 3வது நாட்களில் மழை பெய்வதற்கு வாய்ப்பில்லை. ஆனால் 4, 5வது நாளில் 40 – 60% மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதால் அன்றைய நாட்களில் ஆட்டம் தடைப்பட வாய்ப்புள்ளது.

- Advertisement -

பிட்ச் ரிப்போர்ட்:

எட்ஜ்பஸ்டன் பிட்ச் முதல் சில நாட்களில் வேகம், பவுன்ஸ் ஆகியவற்றுக்கு சாதகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுக்கிறது. வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்பதால் வேப்பந்து வீச்சாளர்கள் ஸ்விங் செய்து சவாலைக் கொடுப்பார்கள். இருப்பினும் 3, 4வது நாட்களில் பவுன்ஸ் குறைந்து பிட்ச் பேட்டிங் செய்வதற்கு நன்கு சாதகமாக மாறும்.

இதையும் படிங்க: இனிமேல் ஜெய்ஸ்வால் ஸ்லிப்ல நிற்க மாட்டாரு.. புதிய ஃபீல்டிங் இடத்தை அறிவித்த கோச் ரியான் டஸ்சேட்

எனவே பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்களை குவிக்க சூழ்நிலையை உணர்ந்து நங்கூரமாக விளையாடுவது அவசியமாகிறது. கடைசி நாளில் பிட்ச்சில் ஏற்படும் காலடித் தடங்கள் மற்றும் விரிசல்கள் ஆகியவை ஸ்பின்னர்கள் பந்தை சுழற்றி தாக்கத்தை ஏற்படுத்த உதவும். 310, 280, 240, 185 என்பது இந்த மைதானத்தில் சராசரி 4 இன்னிங்ஸ்களின் ஸ்கோராகும். எனவே டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement