நான் சொன்னதை செய்ஞ்சி காமிச்சிட்டாரு.. இனிமே நீங்க தான் அவருக்கு சப்போர்ட் பண்ணனும் – விராட் கோலி பேச்சு

Virat and Patidar
- Advertisement -

அகமதாபாத் நகரில் ஜூன் 3-ஆம் தேதி நடைபெற்ற ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப்போட்டியில் விளையாடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நடப்பு 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் ஆர்.சி.பி அணியானது இதுவரை மூன்று சீசனில் இறுதிப் போட்டிக்கு முன்னேறி கோப்பையை தவற விட்டுள்ளது.

ரஜத் பட்டிதாருக்கு இனியும் ஆதரவு வழங்க வேண்டும் : விராட் கோலி பேச்சு

இந்நிலையில் நான்காவது முறையாக இந்த ஆண்டு இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்ற ஆர்.சி.பி அணி பஞ்சாப் அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது. ஆர் சி பி அணியின் இந்த வெற்றி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக ஒரு கோப்பையையாவது கைப்பற்ற முடியுமா? என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு இந்த வெற்றி பரிபூரண உற்சாகத்தை அளித்துள்ளது.

- Advertisement -

நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இன்று விமானம் மூலம் பெங்களூரு வந்தடைந்தது. அந்த வகையில் பெங்களூரு விமான நிலையத்திற்கு வந்த ஆர்சிபி அணியை கர்நாடக துணை முதல்வர் நேரில் சென்று வரவேற்றார். அதோடு சின்னசாமி மைதானத்தில் வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்று வருகிறது.

விமான நிலையத்திலிருந்து மைதானத்திற்கு வரும் வழி எங்கும் ரசிகர்கள் ஆர்.சி.பி அணியின் வீரர்களை உற்சாகத்துடன் ஆரவாரமாக வரவேற்றனர். இந்நிலையில் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற வெற்றி கொண்டாட்டத்தில் பேசிய நட்சத்திர வீரர் விராட் கோலி கூறுகையில் : எனக்கு பேசுவதற்கு அதிக நேரம் இல்லை. நான் பேச வந்ததை பேச வேண்டும். எங்கள் கேப்டன் சொன்னதையே சொல்லி என் பேச்சை ஆரம்பிக்கிறேன்.

- Advertisement -

“ஈ சலா கப் நம்தே” இல்லை, “ஈ சாலா கப் நமது” இறுதியாக இதை சாதித்து விட்டோம். இந்த கோப்பை எனக்கானது மட்டும் கிடையாது. எங்களுடன் துணை நின்ற அனைத்து ரசிகர்களுக்கும் சொந்தமானது. இப்படி ஒரு ரசிகர் பட்டாளத்தை நான் பார்த்ததில்லை. நான் ஏற்கனவே இந்த ஆண்டு அறிமுக விழாவின் போது நீண்ட காலத்திற்கான கேப்டனாக பட்டிதார் இருக்கப் போகிறார் என்று கூறினேன். அதனை நிரூபித்துள்ள அவர் தற்போது நமக்கு முதல் ஆண்டிலேயே கோப்பையையும் பெற்றுத்தந்துள்ளார்.

இதையும் படிங்க : ஐ.பி.எல் கோப்பையை வென்ற ஆர்.சி.பி கேப்டனுக்கு விலைமதிப்பில்லாத பரிசை வழங்கிய கிங் கோலி – விவரம் இதோ

எனவே இனிவரும் ஆண்டுகளிலும் நாம் இவரை தொடர்ச்சியாக ஆதரிக்க வேண்டும். அதேபோன்று ஆர்சிபி அணிக்கு வரும் புதிய கேப்டன்களையும் ஆதரிக்க வேண்டும் என விராட் கோலி பேசியது குறிப்பிடத்தக்கது.

Advertisement