ஷாட் ஆஃப் ஐபிஎல் ஷ்ரேயாஸ்க்கு சல்யூட்.. நானா இருந்தா பும்ராவிடம் உடைஞ்சுருப்பேன்.. பாராட்டிய ஏபிடி

AB De Villiers
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரின் மாபெரும் இறுதிப் போட்டியில் பெங்களூருவை எதிர்கொள்ள பஞ்சாப் தகுதி பெற்றது. குறிப்பாக ஜூன் 1ஆம் தேதி நடைபெற்ற குவாலிபயர் 2 போட்டியில் மும்பையை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. அப்போட்டியில் முதலில் விளையாடிய மும்பை 204 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது.

அதைத் துரத்திய பஞ்சாப் 19 ஓவரிலேயே 207/5 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அந்த அணிக்கு அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 87*, ஜோஸ் இங்லிஷ் 38, நேஹல் வதேரா 48 ரன்களை அடித்து வெற்றியில் பங்காற்றினர். அதனால் 14 வருடங்கள் கழித்து ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாட பஞ்சாப் தகுதி பெற்றது. மறுபுறம் தோல்வியைச் சந்தித்த மும்பை 6வது கோப்பையை வெல்ல முடியாமல் வெளியேறியது.

- Advertisement -

ஸ்ரேயாஸ் மாஸ் சம்பவம்:

முன்னதாக அந்தப் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி மும்பைக்கு சவாலைக் கொடுத்தார். அப்போது மும்பை கேப்டன் பாண்டியா தம்முடைய பிரம்மாஸ்திரமான ஜஸ்ப்ரித் பும்ராவை வைத்து அவரை காலி செய்வதற்காக 18வது ஓவரை கொடுத்தார். அந்த ஓவரில் எதிர்பார்த்ததைப் போலவே ஜஸ்ப்ரித் பும்ரா துல்லியமான யார்க்கர் பந்தை வீசினார்.

அந்தப் பந்துக்கு கடந்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரை போல உலகின் பெரும்பாலான பேட்ஸ்மேன்கள் கிளீன் போல்டாகி சென்றிருப்பார்கள். ஆனால் அதை தில்லாக எதிர்கொண்ட ஸ்ரேயாஸ் கொஞ்சம் பின்னே சென்று பேட்டை சரியாகப் பந்தின் மேல் வைத்து தேர்ட் மேன் திசையில் பௌண்டரியாக பறக்க விட்டு பும்ராவின் அச்சுறுத்தலை முறியடித்து பஞ்சாப்பை வெற்றி பெற வைத்தார். இந்நிலையில் அந்த தருணம் பற்றி ஜாம்பவான் ஏபி டீ வில்லியர்ஸ் ஜியோ ஹாட்ஸ்டார் நேரலையில் பாராட்டியது பின்வருமாறு.

- Advertisement -

ஏபிடி பாராட்டு:

“என்னைப் பொறுத்த வரை அது இந்த ஐபிஎல் தொடரின் ஷாட் (ஷாட் ஆஃப் ஐபிஎல்). அந்த துல்லியமான யார்க்கர் பந்து மிடில் ஸ்டம்ப்பை நோக்கி வந்தது. அது உங்களுடைய பாதம், பேட்டை பதம் பார்க்க வந்தது. அதிலிருந்து உங்களால் தப்பிக்க முடியாது. ஒருவேளை நான் அதை எதிர்கொண்டிருந்தால் கூட என்னுடைய ஸ்டம்ப்புகள் உடைந்திருக்கும். ஆனால் அதே பந்தில் பௌண்டரி அடித்த ஸ்ரேயாஸ் உலகின் சிறந்த மும்பை பவுலருக்கு எதிராக அழுத்தத்தைப் போட்டார்”

இதையும் படிங்க: மும்பை இந்தியன்ஸ் பத்தி எனக்கு தெரியாதா? அதை டார்கெட் பண்ணிதான் அடிச்சேன் – நேஹல் வதேரா பேட்டி

“இது அற்புதமான பேட்டிங். அபாரமான சக்தி பலத்தைக் கொண்டுள்ள இவர் என்ன ஒரு அற்புதமான பிளேயர். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன். இன்று அவர் விளையாடிய இன்னிங்ஸ் உலகிற்கு அப்பாற்பட்டது. அழுத்தமான வாழ்வா – சாவா நேரத்தில் உயர்ந்து நின்ற அவர் தமது வழியில் வரும் அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர். தலையை நேராக வைத்து அவர் பறக்க விட்ட சிக்ஸர்கள் பார்க்க விருந்தாக அமைந்தது. திமிர்தனமாக இல்லாமல் அமைதியாக இருக்கும் அவரை விரும்புகிறேன். இந்த பையனுக்கு வருங்காலத்தில் இன்னும் நிறைய ரன்கள் வரும். ஸ்ரேயாஸ் உங்களுக்கு சல்யூட்” என்று பாராட்டினார்.

Advertisement