இந்தியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 2025 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பிளே ஆப் சுற்று போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற இரண்டாவது குவாலிஃபயர் ஆட்டத்தில் ஹார்டிக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
மும்பையை டார்கெட் பண்ணிதான் அடிச்சேன் : நேஹல் வதேரா
அதன்படி நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற ஷ்ரேயாஸ் ஐயர் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய மும்பை அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் அணி சார்பாக அதிகபட்சமாக திலக் வர்மா மற்றும் சூரியகுமார் யாதவ் ஆகியோர் தலா 44 ரன்கள் குவித்து அசத்தினர். பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய பஞ்சாப் அணியானது 19 ஓவர்களின் முடிவிலேயே 5 விக்கெட்டுகளை இழந்து 207 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் போது பஞ்சாப் அணி சார்பாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் ஆட்டமிழக்காமல் 87 ரன்களையும், நேஹல் வதேரா 48 ரன்களையும் குவித்து அசத்தினர். இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தன்னுடைய சிறப்பான ஆட்டம் குறித்து பேசிய பஞ்சாப் அணியின் இளம் வீரரான நேஹல் வதேரா கூறியதாவது :
நான் இதுபோன்ற ஒரு பெரிய போட்டிக்காக தான் இவ்வளவு நாட்கள் காத்திருந்தேன். அதிலும் குறிப்பாக இதுபோன்ற ஒரு செமி பைனல் போட்டியில் என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிவந்ததில் மிகவும் மகிழ்ச்சி. ஏற்கனவே நான் இரண்டு ஆண்டுகள் மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடி இருக்கிறேன்.
இதையும் படிங்க : ஆர்சிபி’யை நோக்கி வரோம்.. இன்னும் முடியல.. தோல்விக்கு பின் இதை செஞ்சு கம்பேக் கொடுத்துருக்கோம்.. ஸ்ரேயாஸ் பேட்டி
எனவே அவர்கள் எவ்வாறு செயல்படுவார்கள் என்பதை தெரிந்து அதை டார்கெட் செய்து விளையாடினேன். ஷ்ரேயாஸ் ஐயரும் என்னை மிகச் சிறப்பாக கையாண்டார். அவர் கொடுத்த நம்பிக்கையின் பெயரிலேயே என்னுடைய சிறப்பான ஆட்டம் வெளிவந்தது. இந்த வெற்றியை அப்படியே இறுதிப்போட்டியிலும் தொடர்வோம் என நேஹல் வதேரா கூறியது குறிப்பிடத்தக்கது.



