இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 64-ஆவது லீக் போட்டியானது நேற்று அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற குஜராத் அணியின் கேப்டன் சுப்மன் கில் தங்களது அணி முதலில் பந்துவீசும் என்று அறிவித்தார்.
குஜராத் அணியை வீழ்த்திய பின்னர் பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் :
அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய லக்னோ அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் குவித்தது. லக்னோ அணி சார்பாக அதிகபட்சமாக மிட்சல் மார்ஷ் 117 ரன்களையும், நிக்கோலஸ் பூரான் 56 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் 236 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது 20 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 202 ரன்களை மட்டுமே குவித்ததால் லக்னோ அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக ஷாருக்கான் 57 ரன்களையும், ரூதர்போர்டு 38 ரன்களையும் குவித்தனர்.
இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் பெற்ற வெற்றி குறித்து பேசிய லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில் : உண்மையிலேயே இந்த வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு அணியாக நாங்கள் நல்ல கிரிக்கெட்டை இந்த போட்டியில் விளையாடியுள்ளோம். இந்த தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் வேளையில் இந்த வெற்றி வந்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
ஆனால் இதெல்லாம் கிரிக்கெட்டில் நடக்கக்கூடிய சகஜமான ஒன்றுதான். இந்த ஆண்டு நாங்கள் பிளே ஆப் வாய்ப்பை இழந்துள்ளோம். ஆனால் இந்த தொடரில் இருந்து பல்வேறு விடயங்களை கற்றுக் கொண்டுள்ளோம். இந்த தொடரில் எங்களது அணியில் நிறைய வீரர்கள் காயத்தால் விளையாட முடியாமல் போனது பாதகத்தை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க : 236 ரன்ஸ் அதிகம்.. லக்னோவிடம் தோற்க இதான் காரணம்.. பிளே ஆஃப் முன்னாடி இதை செஞ்சாகனும்.. கில் பேட்டி
அதே வேளையில் மிட்சல் மார்ஷ், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரான் போன்ற வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருவது எங்களது அணிக்கு பலம். அதேபோன்று ஃபீல்டிங்கிலும் நாங்கள் நிறைய தவறுகளை செய்துள்ளோம். இதெல்லாம் திருத்திக் கொண்டு நிச்சயம் அடுத்த தொடரில் பலமாக திரும்புவோம் என ரிஷப் பண்ட் கூறியது குறிப்பிடத்தக்கது.



