ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் மே 22ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்ற 64வது போட்டியில் குஜராத்தை 33 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ தோற்கடித்தது. அந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அபாரமாக விளையாடி 236 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. அதிகபட்சமாக மிட்சேல் மார்ஷ் சதத்தை அடித்து 117, நிக்கோலஸ் பூரான் 56* ரன்கள் எடுத்தார்கள்.
அடுத்ததாக விளையாடிய குஜராத்தை சிறப்பாக பவுலிங் செய்த லக்னோ 20 ஓவரில் 202/9 ரன்களுக்கு கட்டுப்படுத்தி 6வது ஆறுதல் வெற்றியைப் பெற்றது. அதிகபட்சமாக தமிழர் வீரர் சாருக்கான் 57, ரூதர்போர்ட் 38 ரன்களை எடுத்தனர். லக்னோ அணிக்கு அதிகபட்சமாக வில்லியம் ஓ’ரோர்க்கே 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். இதையும் சேர்த்து குஜராத் தங்களுடைய 4வது தோல்வியைப் பதிவு செய்தது.
குஜராத் தோல்வி:
இருப்பினும் அந்த அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது. மறுபுறம் லீக் சுற்றுடன் வெளியேறிய லக்னோ தங்களுடைய 5வது ஆறுதல் வெற்றியைப் பெற்றது. இந்நிலையில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் தங்களுடைய அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக எப்படியாவது வெற்றியுடன் லீக் சுற்றை முடிக்க வேண்டும் என்று குஜராத் கேப்டன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தப் போட்டியில் பந்து வீச்சில் 20 ரன்கள் எக்ஸ்ட்ரா எடுக்காதது தோல்விக்கு காரணமானதாகவும் அவர் கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நாங்கள் எக்ஸ்ட்ரா 15 – 20 ரன்களை எடுத்தார்கள். லக்னோவை நாங்கள் 210 ரன்களுக்கு கட்டுப்படுத்த முயற்சிப்போம். 210 ரன்களுக்குள் எதிரணியை கட்டுப்படுத்துவதற்கும் 230 ரன்கள் கொடுத்து கட்டுப்படுத்துவதற்கும் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது”
தோல்விக்கான காரணம்:
“நாங்கள் பவர் பிளேயர் ஓவர்களில் நன்றாக பவுலிங் செய்தோம். ஆனால் அங்கே விக்கெட்டுகளை எடுக்கவில்லை பவர்பிளே ஓவர்கள் கடந்த பின் எஞ்சிய 14 ஓவர்களில் எதிரணி 180 ரன்கள் அடித்தார்கள். அது மிகவும் அதிகமானது. இன்றைய போட்டியில் 17 ஓவர்கள் வரை நாங்கள் பேட்டிங்கில் நன்றாகவே செயல்பட்டோம். 240 ரன்களை துரத்துவது எளிது கிடையாது. இன்று எங்களுக்கு தோல்வி கிடைத்தாலும் நிறைய நேர்மறையான விஷயங்கள் கிடைத்தன”
இதையும் படிங்க: இதனால தான் ஐபிஎல் உலகின் பெஸ்ட் லீக்.. 2010 டெக்கான் சார்ஜர்ஸில் ஆரம்பிச்ச கனவு.. ஆட்டநாயகன் மார்ஷ் பேட்டி
“குறிப்பாக ஷாருக்கான் மற்றும் ரூதர்போர்ட் ஆகியோருடைய பேட்டிங் மிகப்பெரிய நேர்மறையாகும். மீண்டும் பாதைக்கு திரும்புவதே பிளே ஆஃப் சுற்றில் அசத்துவதற்கு தேவையான வெற்றிக்கான சாவியாகும். பிளே ஆஃப் சுற்றுக்கு முன்பாக நாங்கள் மீண்டும் எப்படியாவது வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டும்” என்று கூறினார்.



