சுப்மன் கில்லுடன் சாதனை பார்ட்னர்ஷிப் அமைக்க இதான் காரணம்.. ஆரஞ்சு தொப்பி நாயகன் சுதர்சன் பேட்டி

Sai Sudharsan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 21ஆம் தேதி கொல்கத்தாவில் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் கொல்கத்தா டாஸ் வென்று குஜராத்துக்கு எதிராக முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய குஜராத் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 20 ஓவரில் ரன்கள் குவித்தது. அந்த அணிக்கு தமிழகத்தின் சாய் சுதர்சன் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் ஆரம்ப முதலே நிதானம் கலந்த அதிரடியை வெளிப்படுத்தினர்.

அந்த வகையில் 13 ஓவர்கள் வரை அபாரமாக விளையாடி 114 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த அந்த ஜோடி குஜராத்துக்கு நல்ல துவக்கத்தை கொடுத்தது. அதில் சாய் சுதர்சன் அரை சதத்தை அடித்து 52 (36) ரன்னில் அவுட்டானார். மறுபுறம் சதத்தை நெருங்கிய கில் 90 (55) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்துடன் சென்றார்.

- Advertisement -

சாதனை ஜோடி:

இறுதியில் ஜோஸ் பட்லர் 41* (23), ஷாருக்கான் 11* (5) ரன்கள் அடித்து நல்ல ஃபினிஷிங் கொடுத்தார்கள். இந்தப் போட்டியில் அடித்த ரன்களையும் சேர்த்து 2025 ஐபிஎல் தொடரில் சாய் சுதர்சன் 417 ரன்களை குவித்துள்ளார். அதன் வாயிலாக அதிக ரன்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரானை (368) முந்தியுள்ள அவர் ஆரஞ்சு தொப்பியை தன் வசமாக்கி சாதனை படைத்துள்ளார்.

மேலும் ஐபிஎல் தொடரில் அதிக முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த இந்திய ஜோடி என்ற சாதனையையும் அவர் கேப்டன் கில்லுடன் சேர்ந்து படைத்துள்ளார். அந்த இருவரும் இதுவரை 6 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துள்ளார்கள். இதற்கு முன் கேஎல் ராகுல் – மயங் அகர்வால், கௌதம் கம்பீர் – ராபின் உத்தப்பா தலா 5 முறை 100+ ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததே முந்தைய சாதனை.

- Advertisement -

நல்ல புரிதல் இருக்கு:

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “போட்டியின் துவக்கத்தில் பிட்ச் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தது. அதனால் பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக விளையாடுவது கடினமாக இருந்தது. அதன் பின் எங்களுக்கு வேகம் கிடைத்தது. நானும் சுபியும் (சுப்மன் கில்) நல்ல தொடர்பு கொண்டுள்ளோம். நாங்கள் எதிரணி வீசும் மோசமான பந்துகளை பயன்படுத்த முயற்சித்தோம்”

இதையும் படிங்க: 198 ரன்ஸ்.. நிக்கோலஸ் பூரானை முந்தி சுதர்சன் சாதனை.. கில்லுடன் சேர்ந்து வரலாற்று சாதனை.. குஜராத் அசத்தல்

“போட்டியை முடிந்தளவு கடைசி வரை எடுத்துச் செல்ல முயற்சிப்போம். சுபியுடன் கம்பெனி கொடுத்து மகிழ்ச்சியுடன் விளையாடுகிறேன். அவருடைய அனுபவம் எனக்கும் உதவுகிறது. சூழ்நிலைகள் கடினமாக இருக்கும் போது நாங்கள் டபுள் ரன்களை எடுக்க முயற்சிக்கிறோம். பிட்ச் கொஞ்சம் கடினமாக இருப்பதால் கையில் விக்கெட்டை வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியமாக இருந்தது. எங்களுடைய பவுலர்களுக்கு நாங்கள் நல்ல இலக்கை கொடுத்துள்ளோம்” என்று கூறினார்.

Advertisement