ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் அதை செய்றத விரும்பல.. பஞ்சாப் வெற்றிக்கு அந்த 3 பேர் காரணம்.. கேப்டன் ஸ்ரேயாஸ்

- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 18ஆம் தேதி பெங்களூருவில் 34வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் பெங்களூருவை 5 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப் தோற்கடித்தது. மழையால் 14 ஓவர்களாக குறைக்கப்பட்ட அந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 95-9 ரன்களை மட்டுமே எடுத்தது. முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் அதிகபட்சமாக டிம் டேவிட் 50* (26) ரன்கள் எடுத்தார்.

பஞ்சாப்புக்கு அர்ஷ்தீப், ப்ரார், சஹால், மார்கோ யான்சென் ஆகியோர் அதிகபட்சமாக தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். அடுத்து விளையாடிய பஞ்சாப் சிறப்பாக பேட்டிங் செய்து 12.1 ஓவரில் 98-5 ரன்களை எடுத்து தங்களுடைய ஐந்தாவது வெற்றியைப் பதிவு செய்தது. அதிகபட்சமாக நேஹல் வதேரா 33* (19) ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

பஞ்சாப் வெற்றி:

பெங்களூரு அணிக்கு அதிகபட்சமாக ஜோஸ் ஹேசல்வுட் 3 விக்கெட்டுகள் எடுத்தும் சொந்த மண்ணில் 3வது தோல்வியை தவிர்க்க முடியவில்லை. இந்நிலையில் ஆர்சிபி பேட்ஸ்மேன்கள் யாரும் செட்டிலாகி விளையாட விடக்கூடாது என்ற நோக்கத்துடன் கேப்டன்ஷிப் செய்ததாக ஸ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார். மேலும் அர்ஷ்தீப் சிங் பிட்ச் பற்றி சொன்ன நிலையில் மார்கோ யான்சென், சஹால், நேஹல் வதேரா ஆகியோர் பஞ்சாப் வெற்றிக்கு பங்காற்றியதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

இது பற்றி ஸ்ரேயாஸ் பேசியது பின்வருமாறு. “பல்வேறு வகைகள் தான் வாழ்க்கையின் ருசி என்று சொல்வார்கள். அதுபோல இந்த மைதானத்தில் நாங்கள் நிறையப் போட்டிகளில் விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளோம். அது நல்ல சவால். வித்தியாசமாக நான் எதுவும் சிந்திக்கவில்லை. எனது உள்ளுணர்வுகளை பின்பற்றி விக்கெட்டுகளை எடுக்க முயற்சி செய்தேன். புதிய பேட்ஸ்மேன் வந்து உடனடியாக செட்டிலாகி விளையாடுவதை நான் விரும்பவில்லை”

- Advertisement -

அசத்தும் பஞ்சாப்:

“மார்கோ யான்சென் பிட்ச்சில் எக்ஸ்ட்ரா பவுன்சை உருவாக்கி வேகமாக பௌலிங் செய்து எங்களுடைய கப்பலை நிலை நிறுத்தினார். பவுலர்கள் அவருக்கு உதவி செய்தனர். பிட்ச் எப்படி இருக்கும் என்று தெரியாத நிலையில் எங்களுடைய பவுலர்கள் அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வார்கள் என்று நம்பினேன். கடினமான லென்த் பந்துகளை அடிப்பது கடினமாக இருப்பதாக அர்ஷ்தீப் என்னிடம் கூறினார்”

“ஏனெனில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக நேராக சிக்சர் அடிக்க முடியவில்லை. எனவே அதை வைத்து நாங்கள் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினோம். ஒரு பேட்ஸ்மேன் அதிரடியாக விளையாட வேண்டும். அதை இன்று எங்களுக்கு நேஹல் செய்தார். உயர்ந்த அணுகு முறையில் விளையாடிய அவர் இப்படியே தொடர்வார் என்று நம்புகிறேன்”

இதையும் படிங்க: 3க்கு 3.. 14 ஓவர் மேட்ச்சில் பஞ்சாப் வெற்றி.. சொந்த ஊரில் மண்ணை கவ்வுவதில் ஆர்சிபி மோசமான சாதனை

“நீங்கள் மேட்ச் வின்னர் என்பதால் நமக்கு விக்கெட்டுகளை எடுத்துக் கொடுக்க வேண்டும் என்று சஹாலிடம் கூறினேன். கம்பேக் கொடுக்கும் தன்மை கொண்டுள்ள அவர் இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை சிறந்த லெக் ஸ்பின்னராக செயல்பட்டு வருகிறார். பிட்ச் அடிப்படையில் நாங்கள் ரசிகர்களுக்கு திரில்லர் போட்டிகளை விருந்தளிக்கிறோம்” என்று கூறினார்.

Advertisement