இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் போது பல்வேறு திறமையான வீரர்கள் அடையாளம் காணப்படுவார்கள். அந்த வகையில் இந்த ஆண்டும் சில குறிப்பிட்ட இளம் வீரர்கள் மிகச்சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக பிரியான்ஷ் ஆர்யா தான் விளையாடிய நான்காவது போட்டியிலேயே சதம் அடித்து அனைவரது பார்வையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.
பிரியான்ஷ் ஆர்யா இரண்டாவது அதிசய வீரர் : நவ்ஜோத் சிங் சித்து பாராட்டு
அந்த வகையில் இந்த ஆண்டு பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக அறிமுகமான 24 வயதான பிரியான்ஷ் ஆர்யா சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற போட்டியில் 39 பந்துகளில் சதம் அடித்து அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்திருந்தார்.
அதிலும் குறிப்பாக ஒரு கட்டத்தில் பஞ்சாப் அணி 83 ரன்களுக்கு எல்லாம் 5 விக்கெட்டுகளை இழந்த போது தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலம் பஞ்சாப் அணியை 219 ரன்கள் வரை அழைத்துச் சென்ற அவர் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாகவும் இருந்தார். அவரது இந்த அசத்தலான ஆட்டம் பலரது மத்தியிலும் வரவேற்பினை பெற்றுள்ள வேளையில் அவரை முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிட்டு நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : என்னை பொறுத்தவரை பிரியான்ஷ் ஆர்யா நீண்டகாலம் இந்தியாவுக்காக விளையாடும் ஒரு வீரராக நினைக்கிறேன். ஏனெனில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து அவர் ஒரு அதிசயமான வீரர். போட்டியின் கடினமான சூழலில் அவர் சதம் அடித்து அசத்தியுள்ளார்.
கிட்டத்தட்ட தோல்வியிலிருந்து பஞ்சாப் அணியை மீட்டு தனி ஆளாக வெற்றிக்கு அழைத்துச் சென்றுள்ளார். அதிலும் குறிப்பாக 39 பந்துகளில் சதம் அடித்த அவர் எதிர்கொண்ட பந்துவீச்சாளர்கள் எல்லாம் சிறப்பான பந்துவீச்சாளர்கள். அஷ்வின், நூர் அஹமது, ஜடேஜா, கலீல் அகமது மற்றும் மதீஷா பதிரானா போன்ற மிகச் சிறப்பான பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் சிறப்பான ஷாட்டுகளை விளையாடி இந்த ரன்களை சேர்த்துள்ளார்.
இதையும் படிங்க : இதைப்பத்தி மீட்டிங் போட்டு பேசியே ஆகனும்.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் – சாம்சன் அளித்த பேட்டி
பாயிண்ட் மற்றும் கவர் திசைகளில் சிக்சர் அடிக்கும் விதத்தை பார்க்கும்போது அவரிடம் அனைத்து ரேஞ்ச் ஷாட்களும் இருப்பதை காட்டுகிறது. எனவே தான் சொல்கிறேன் அவர் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்து இரண்டாவது அதிசயமான வீரர் என நவ்ஜோத் சிங் சித்து பாராட்டியது குறிப்பிடத்தக்கது.



