இதைப்பத்தி மீட்டிங் போட்டு பேசியே ஆகனும்.. குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு பின்னர் – சாம்சன் அளித்த பேட்டி

Samson
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 23-வது லீக் போட்டியானது நேற்று அஹமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. அதன்படி நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாசில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

குஜராத் அணிக்கெதிரான தோல்விக்கு காரணம் இதுதான் : சஞ்சு சாம்சன்

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய குஜராத் டைட்டன்ஸ் அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. குஜராத் அணி சார்பாக அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் சுதர்சன் 82 ரன்களையும், ஷாருக்கான் மற்றும் பட்லர் ஆகியோர் தலா 36 ரன்களையும் குவித்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் 218 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியானது குஜராத் டைட்டன்ஸ் அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரன்களை மட்டுமே குவித்தது. இதன் காரணமாக குஜராத் அணி 58 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியின் போது பந்துவீச்சில் 15 முதல் 20 ரன்கள் வரை அதிகமாக கொடுத்துவிட்டதாக நினைக்கிறேன். அதுமட்டுமின்றி சேசிங்கில் நல்ல மொமென்டம் கிடைக்கும் போதெல்லாம் விக்கெட்டை இழந்தது எங்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது.

- Advertisement -

நானும் ஹெட்மயரும் பேட்டிங் செய்யும்போது இந்த இலக்கை எட்டி விடலாம் என்று தான் நினைத்தோம். ஆனால் என்னுடைய விக்கெட் விழும்போது போட்டி முற்றிலும் அவர்கள் கையில் சென்று விட்டது. அதேபோன்று பந்துவீச்சில் போட்டியின் ஆரம்பத்திலேயே ஆர்ச்சர் சிறப்பாக பந்துவீசி கில் விக்கெட்டை வீழ்த்தி இருந்தார். ஆனால் அதன் பின்னர் எங்களால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை.

இதையும் படிங்க : வெர்சட்டைல் பேட்ஸ்மேனா இருக்க இதை செய்றேன்.. ராஜஸ்தானை வீழ்த்திய திட்டம் பற்றி.. ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி

அதேபோன்று இறுதி கட்ட ஓவர்களிலும் அதிகப்படியான ரன்களை விட்டுக் கொடுத்து விட்டோம். இதுபோன்ற சில குறைகள் தான் தோல்விக்கு காரணமாக அமைந்தது. நிச்சயம் இதை பற்றி நாளை மீட்டிங் ஏற்பாடு செய்து பேசியாக வேண்டும். ஒரு போட்டியில் நாம் தோற்கும் போது எந்தெந்த இடங்களில் எல்லாம் தோற்றோம் என்பதை அறிந்து அதை சரி செய்தால் மட்டுமே அடுத்த போட்டியில் பலமாக திரும்ப முடியும் என சஞ்சு சாம்சன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement