வெர்சட்டைல் பேட்ஸ்மேனா இருக்க இதை செய்றேன்.. ராஜஸ்தானை வீழ்த்திய திட்டம் பற்றி.. ஆட்டநாயகன் சுதர்சன் பேட்டி

Sai Sudharsan
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் ஒன்பதாம் தேதி அகமதாபாத் நகரில் 23வது போட்டி நடைபெற்றது. அதில் ராஜஸ்தான் அணியை 58 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த குஜராத் தங்களது நான்காவது வெற்றியைப் பெற்று அசத்தியது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய குஜராத் 20 ஓவரில் 217-6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தமிழகத்தின் சாய் சுதர்சன் 82, ஷாருக்கான் 36, ஜோஸ் பட்லர் 36 ரன்கள் எடுத்தனர்.

ராஜஸ்தானுக்கு அதிகபட்சமாக தீக்சனா துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். பின்னர் விளையாடிய ராஜஸ்தான் ஆரம்பம் முதலே தடுமாற்றமாக விளையாடி 19.2 ஓவரில் 152 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வியை சந்தித்தது. அதிகபட்சமாக கேப்டன் சஞ்சு சாம்சன் 41, ஹெட்மயர் 52 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

குஜராத் வெற்றி:

குஜராத் அணிக்கு அதிகபட்சமாக தமிழக வீரர் சாய் கிஷோர் 2, ரஷித் கான் 2, பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனால் நான்காவது வெற்றியைப் பெற்ற குஜராத் புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த நிலையில் ராஜஸ்தான் மூன்றாவது தோல்வியைச் சந்தித்தது. இந்த வெற்றிக்கு 82 ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய சாய் சுதர்சன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இந்நிலையில் ஐபிஎல் போன்ற கடினமானத் தொடரில் ஆரம்பத்திலேயே வெற்றி வேகத்தைப் பெறுவது முக்கியம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் விழிப்புணர்வு, திறன் ஆகியவற்றில் கடினமாக உழைத்து முன்னேறுவதே தாம் பன்முகத்தன்மை கொண்ட பேட்ஸ்மேனாக அசத்துவதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். மேலும் குஜராத் அணியின் பேட்டிங் திட்டம் பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

தமிழக ஆட்டநாயகன்:

“ஐபிஎல் உங்களுக்கு ஆரம்பத்திலேயே வேகம் தேவைப்படக்கூடிய ஒரு தொடராகும். அதில் பங்காற்றி அணியை வெற்றி பெற வைப்பதில் மகிழ்ச்சி. ஆரம்பத்தில் பிட்ச் வேகமாக இருந்தது. அதில் அதிக நேரத்தை வீணடிக்க முடியாது என்பதால் பவர்பிளே ஓவர்களின் இரண்டாவது பகுதியை நாங்கள் பயன்படுத்திக் கொண்டோம். கையில் அதிகம் விக்கெட்டுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே எங்களுடைய இலக்கு”

இதையும் படிங்க: 58 ரன்ஸ்.. என்னையா கழற்றி விட்டிங்க? சிராஜ் பவர்பிளே சாதனை.. குஜராத் 2வது பெரிய வெற்றி

“அது வேலை செய்தது. என்ன செய்ய வேண்டும் என்பதில் எங்களிடம் நிறைய விழிப்புணர்வு இருக்கிறது. ஒருவேளை ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழக்கும் பட்சத்தில் செட்டிலாகும் பேட்ஸ்மேன் தொடர்ந்து விளையாட வேண்டும். கடைசியில் எங்களுக்கு ஹிட்டர்கள் அடித்தளத்தை அமைத்தால் கடைசி 5 – 7 ஓவர்களை நன்றாகப் பயன்படுத்த முடியும். என்னால் என்ன இன்னும் சிறப்பாக செய்ய முடியும் என்பதையே எப்போதும் பார்க்கிறேன். என்னுடைய விழிப்புணர்வு மற்றும் திறன் ஆகியவற்றில் முன்னேற முயற்சிக்கிறேன். அடிப்படையான விஷயங்களில் நிறைய வேலை செய்வது நான் பன்முகத்தன்மை கொண்ட பேட்ஸ்மேனாக இருக்க உதவுகிறது” என்று கூறினார்.

Advertisement