219 ரன்ஸ்.. பால் வல்தாட்டி போல சிஎஸ்கே’வை ஓடவிட்ட பிரியான்ஸ்.. கோலியை முந்தி 4 சரவெடி சாதனை

Priyans Arya
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி இரவு 7.30 மணிக்கு முள்ளான்பூரில் 22வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் சென்னைக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப்புக்கு பிரப்சிம்ரன் சிங் 0 ரன்னில் முகேஷ் சௌத்ரி வேகத்தில் விக்கெட்டை இழந்தார்.

அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை 9 ரன்னில் காலி செய்த கலீல் அகமது அதற்கடுத்ததாக வந்த மார்கஸ் ஸ்டோய்னிஸை 4 ரன்னில் அவுட்டாக்கினார். ஆனால் அவர்களுக்கும் சேர்த்து மறுபுறம் இளம் துவக்க வீரர் பிரியான்ஸ் ஆர்யா சிஎஸ்கே பவுலர்களை அடித்து நொறுக்கி கொண்டிருந்தார். இருப்பினும் எதிர்புறம் நேஹல் வதேராவை 9 ரன்னில் காலி செய்த அஸ்வின் அடுத்து வந்த மேக்ஸ்வெலை 1 ரன்னில் அவுட்டாக்கினார்.

- Advertisement -

நொறுக்கிய பிரியான்ஸ்:

அதனால் 83/5 என பஞ்சாப் தடுமாறினாலும் இந்தப் பக்கம் 19 பந்தில் 50 ரன்கள் தொட்ட ஆர்யா சென்னை பவுலர்களை சரமாரியாக அடித்து நொறுக்கினார். நேரம் செல்ல செல்ல விஸ்வரூபம் எடுத்த அவர் பதிரனாவுக்கு எதிராக 6, 6, 6, 4 என அடுத்தடுத்த பௌண்டரிகளுடன் 39 பந்தில் சதத்தை அடித்தார். தொடர்ந்து பட்டாசாக விளையாடிய அவர் 7 பவுண்டரி 9 சிக்ஸருடன் 103 (42) ரன்கள் விளாசி அவுட்டானார்.

அடுத்ததாக வந்த சசாங் சிங் டெத் ஓவர்களில் சென்னை பவுலர்களை வெளுத்து வாங்கி 52* (36) ரன்கள் குவித்தார். அவருடன் மார்கோ யான்சென் 34* (19) ரன்கள் எடுத்ததால் 20 ஓவரில் பஞ்சாப் 219-6 ரன்களை குவித்து அசத்தியது. சென்னைக்கு அதிகபட்சமாக அஸ்வின் கலீல் அகமது தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

4 சாதனைகள்:

முன்னதாக 24 வயதாகும் பிரியான்ஸ் ஆர்யா இந்த வருடம் ஐபிஎல் தொடரில் அறிமுகமானார். அதில் 4வது போட்டியிலேயே 39 பந்துகளில் 100 ரன்கள் அடித்த அவர் ஐபிஎல் தொடரில் வேகமாக சதத்தை அடித்த சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். அத்துடன் தனது அறிமுக ஐபிஎல் தொடரிலேயே சதத்தை அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

இதையும் படிங்க: லட்சம் முறை கேட்டாலும் என்னோட அதிரடிக்கு இதான் ஒரே காரணம்.. எனக்கு இதான் வேலை.. ஆட்டநாயகன் பூரான் பேட்டி

மேலும் ஐபிஎல் தொடரில் ஓவர்கள் (12.5 ஓவரில் 100) அடிப்படையில் வேகமாக சதத்தை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன் 2016ஆம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக விராட் கோலி 13.3 ஓவரில் சதத்தை அடித்ததே முந்தைய சாதனை. அத்துடன் ஐபிஎல் தொடரில் 4வது வேகமான சதத்தை அடித்த வீரர் என்ற டிராவிஸ் ஹெட் (தலா 39 பந்துகள்) சாதனையையும் அவர் சமன் செய்தார். மொத்தத்தில் 2011இல் பஞ்சாப் அணிக்காக பால் வல்த்தாட்டி சென்னையை அடித்து நொறுக்கி ஓடவிட்டதை போலவே இன்று பிரியான்ஸ் தெறிக்க விட்டுள்ளார்.

Advertisement