லட்சம் முறை கேட்டாலும் என்னோட அதிரடிக்கு இதான் ஒரே காரணம்.. எனக்கு இதான் வேலை.. ஆட்டநாயகன் பூரான் பேட்டி

Nicholas Pooran
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 8ஆம் தேதி கொல்கத்தாவில் மதியம் 3.30 மணிக்கு 21வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் லக்னோ அணி கொல்கத்தாவை அதன் சொந்த மண்ணில் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. அதில் முதலில் விளையாடிய லக்னோ 20 ஓவரின் சிறப்பாக பேட்டிங் செய்து 238-3 ரன்கள் குவித்து அசத்தியது.

அதிகபட்சமாக ஐடன் மார்க்ரம் 47 (28), மிட்சேல் மார்ஷ் 81 (48) ரன்கள் எடுத்தார்கள். அவர்களை விட மூன்றாவது இடத்தில் களமிறங்கி கொல்கத்தாவை புரட்டி எடுத்த நிக்கோலஸ் பூரான் 87* (36) ரன்கள் விளாசி தெறிக்க விட்டார். கொல்கத்தா அணிக்கு அதிகபட்சமாக ஹர்ஷித் ராணா 2 விக்கெட்டுகளை எடுத்தார். அடுத்ததாக விளையாடிய கொல்கத்தாவுக்கு டீ காக் 15, சுனில் நரைன் 30 ரன்கள் அடித்து ஓரளவு நல்ல துவக்கத்தைக் கொடுத்தனர்.

- Advertisement -

ஆட்டநாயகன் பூரான்:

இருப்பினும் மிடில் ஆர்டரில் கேப்டன் அஜிங்க்ய ரஹானே, வெங்கடேஷ் ஐயர் சிறப்பாக விளையாடி அடித்து 61, 45 ரன்கள் எடுத்தார்கள். ஆனால் மீண்டும் லோயர் மிடில் ஆர்டரில் ரமந்தீப் சிங் 1, ரகுவன்ஷி 5, ரசல் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். அதனால் கடைசியில் ரிங்கு சிங் 38*, ராணா 10* ரன்கள் எடுத்தும் 20 ஓவரில் 234-7 ரன்களை மட்டுமே எடுத்த கொல்கத்தா 3வது தோல்வியை பதிவு செய்தது.

3வது வெற்றியைப் பதிவு செய்த லக்னோவுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 2, சர்துள் தாகூர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். இந்த வெற்றிக்கு 87* ரன்கள் அடித்து முக்கிய பங்காற்றிய நிக்கோலஸ் பூரான் ஆட்டநாயகன் விருதை வென்றார். அவரிடம் எப்படி இவ்வளவு சுலபமாக சிக்ஸர்களை அடித்து அதிரடியாக விளையாடுகிறீர்கள் என்று தொகுப்பாளர் கேட்டார்.

- Advertisement -

லட்சம் முறை சொல்லிட்டேன்:

அதற்கு அதெல்லாம் இயற்கையாகவே வருகிறது என்று பூரான் பதிலளித்தது பின்வருமாறு. “இந்தக் கேள்வி என்னிடம் லட்ச முறை கேட்கப்பட்டு விட்டது. இதற்காக நான் நிறைய பயிற்சி செய்கிறேன். அதையும் தாண்டி நிறைய சமயங்களில் அனைத்தும் எனக்கு இயற்கையாகவே வருகிறது. போட்டியில் என்ன தேவை என்பதை நீங்கள் புரிந்துக்கொள்ள வேண்டும்”

இதையும் படிங்க: 4 ரன்ஸ்.. 5 ஒய்ட் போட்டு கொல்கத்தாவை குழப்பி வெற்றியை பறித்த லார்ட் தாக்கூர்.. ரிங்கு போராட்டம் வீண்

“பவுலர்கள் எப்படி பௌலிங் செய்யப் போகிறார்கள் என்பதை அறிந்து அதற்குத் தகுந்தார் போல் நீங்கள் வேலை செய்ய வேண்டும். மார்ஷ், மார்க்ரம் ஆகியோர் எங்களுக்கு தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடி வருகின்றனர். பார்ட்னர்ஷிப் அமைப்பதில் அசத்தும் அவர்கள் புதிய பந்தில் நிதானமாக விளையாடி அணிக்கு என்ன தேவையோ அதைச் செய்கிறார்கள். ஆட்டத்தை நன்றாக துவங்கி அதைப் பயன்படுத்தி தொடர்ந்து அசத்துவதே எனது வேலை. தொடர்ச்சியாக வரும் வாய்ப்புகளில் நான் தொடர்ந்து மகிழ்ச்சியாக ரன்கள் குவிக்க விரும்புகிறேன்” எனக் கூறினார்.

Advertisement