4 ரன்ஸ்.. 5 ஒய்ட் போட்டு கொல்கத்தாவை குழப்பி வெற்றியை பறித்த லார்ட் தாக்கூர்.. ரிங்கு போராட்டம் வீண்

LSG vs KKR
- Advertisement -

ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் எட்டாம் தேதி மதியம் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் 21வது போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா முதலில் பவுலிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய லக்னோ 20 ஓவரில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்து அசத்தியது. அந்த அணிக்கு அதிகபட்சமாக துவக்க வீரர்கள் ஐடன் மார்க்ரம் 47 (28) மிட்சேல் மார்ஷ் 81 (48) ரன்கள் அடித்து அசத்தினார்கள்.

அவர்களை விட மிடில் ஆர்டரில் எழுத்து வாங்கிய நிக்கோலஸ் பூரான் 87* (36) ரன்கள் விளாசி மிரட்டினார். கொல்கத்தாவுக்கு அதிகபட்சமாக ராணா 2 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய கொல்கத்தாவுக்கு டீ காக் 15 (9) ரன்னில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்த நிலையில் மறுபுறம் அதிரடி காட்டிய சுனில் நரேன் 30 (13) ரன்கள் விளாசி அவுட்டானார்.

- Advertisement -

குழப்பிய தாக்கூர்:

இருப்பினும் அடுத்ததாக ஜோடி சேர்ந்த கேப்டன் அஜிங்க்ய ரஹானே – துணை கேப்டன் வெங்கடேஷ் ஐயர் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். அந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 71 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்ததால் 13 ஓவரில் 162/2 ரன்களை எடுத்த கொல்கத்தா கை மேலே வெற்றி வைத்திருந்தது.

ஆனால் அப்போது 13வது ஓவரை வீசிய சர்துல் தாகூர் முதல் பந்தில் தொடர்ந்து 5 ஒய்டாக போட்டுத் தள்ளினார். அதனால் அரை சதத்தை அடித்த ரகானே குழம்பினாரா என்னவா தெரியவில்லை. அதே ஓவரின் கடைசி பந்தில் தாக்கூரிடம் 61 (25) ரன்களில் ரஹானே தமது விக்கெட்டை இழந்தது போட்டியில் திருப்புமுனையாக அமைந்தது.

- Advertisement -

லக்னோ வெற்றி:

ஏனெனில் அதற்கடுத்ததாக வந்த ரகுவன்சி 5 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தார். அடுத்ததாக வந்த காட்டடி மன்னன் ரசலை 7 (4) ரன்களில் தாக்கூர் அவுட்டாக் கி மீண்டும் திருப்பு முனையை உண்டாக்கினார். அதனால் ஏற்பட்ட அழுத்தத்தில் மறுபுறம் போராடிய வெங்கடேஷ் ஐயர் 45 (29) ரன்னில் விக்கெட்டை இழந்தார். கடைசி நேரத்தில் ரிங்கு சிங் அதிரடியாக போராடியதால் கொல்கத்தா வெற்றிக்கு 20வது ஓவரில் 24 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: நாங்க நல்லா விளையாடியும் தோக்க இந்த 2 விடயம் தான் காரணம்.. மும்பை இந்தியன்ஸ் கோச் – ஜெயவர்த்னே பேட்டி

ரவி பிஸ்னோய் வீசிய அந்த ஓவரில் ஹர்ஷித் ராணா 4, 0, 1 ரன்கள் எடுத்த நிலையில் கடைசி 3 பந்துகளில் ரிங்கு 4, 4, 6 ரன்கள் அடித்துப் போராடினார். ஆனாலும் 20 ஓவரில் கொல்கத்தா 234/7 ரன்கள் மட்டுமே எடுத்து 4 ரன்கள் வித்யாசத்தில் தோல்வியை சந்தித்தது. ரிங்கு 38* (15) ராணா 10* (9) ரன்களுடன் ஏமாற்றத்துடன் வெளியேறிய நிலையில் திரில் வெற்றி பெற்ற லக்னோவுக்கு அதிகபட்சமாக ஆகாஷ் தீப் 2, சர்துள் தாக்கூர் 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

Advertisement