கப்பார் ஸ்டைலில் இந்திய அணியில் விருந்தாளியாக வந்த தவான்.. தொடையில் தட்டி ஸ்பெஷல் விருதை பரிசளிப்பு

Shikhar Dhawan
- Advertisement -

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா தங்களுடைய முதல் 2 போட்டிகளிலும் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்றுள்ளது. குறிப்பாக இரண்டாவது போட்டியில் பரம எதிரி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது. அதனால் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்ற இந்தியா செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

துபாயில் நடைபெற்ற அந்தப் போட்டியில் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் ஆகிய 3 துறைகளிலும் அபாரமாக செயல்பட்ட இந்தியா எளிதாக பாகிஸ்தானை தோற்கடித்தது. பாகிஸ்தான் நிர்ணயித்த 242 இலக்கை அதிகபட்சமாக விராட் கோலி 100*, சுப்மன் கில் 46, ஸ்ரேயாஸ் ஐயர் 56 ரன்கள் அடித்து இந்தியாவை வெற்றி பெற வைத்தனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 3, பாண்டியா 2 விக்கட்டுகளை அதிகபட்சமாக எடுத்தார்கள்.

- Advertisement -

விருந்தாளியாக தவான்:

அதன் காரணமாக 2017 ஃபைனல் தோல்விக்காக பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா இத்தொடரிலிருந்து வெளியேற்றியது. முன்னதாக 2023 உலகக் கோப்பை முதல் இந்திய அணியில் ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் வீரருக்கு சிறந்த ஃபீல்டர் விருது கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் அவ்விருதுக்கு பரிந்துரைக்கப்படுவதாக ஃபீல்டிங் பயிற்சியாளர் டி திலிப் அறிவித்தார்.

அந்த விருதை கொடுப்பதற்கு ஸ்பெஷல் விருந்தாளர் வருவதாகவும் அவர் மாடிப்படியை நோக்கி கையைக் காட்டினார். அங்கிருந்து மிஸ்டர் ஐசிசி என்று இந்திய ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த முன்னாள் வீரர் ஷிகர் தவான் முறுக்கு மீசையுடன் கப்பார் ஸ்டைலில் 2 கைகளை உயர்த்திக்கொண்டே சிரித்த முகத்துடன் வந்தார். அவரை இந்தியன் அணியினர் கைதட்டி வரவேற்றார்கள்.

- Advertisement -

அக்சர் படேல்:

குறிப்பாக விராட் கோலி சிரிப்பை அடக்க முடியாமல் கைதட்டி வரவேற்றார். அங்கே வந்த தவான் ஜடேஜாவை கட்டிப்பிடித்தார். பின்னர் அவர்கள் இருவரும் தொடையில் தட்டி ஒற்றைக் கையை உயர்த்தி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதன் பின் அக்சர் படேல் அந்த விருதை வெல்வதாக தவான் அறிவித்தது பின்வருமாறு. “மொத்த இந்திய அணிக்கும் பெரிய வாழ்த்துக்கள். குறிப்பாக பவுலிங் துறையில் குல்தீப் 3 விக்கெட்டுகளை எடுத்தார்”

இதையும் படிங்க: விராட் கோலியால் நிச்சயம் அந்த சாதனையினை நிகழ்த்த முடியும்.. நம்பிக்கை தெரிவித்த – சோயிப் அக்தர்

“பேட்டிங் பொறுத்த வரை விராட் நன்றாக விளையாடினார். இதைத்தான் அனுபவிக்க வீரர்கள் செய்வார்கள் வெல்டன். கில், ராகுல் கன்சிஸ்டெண்சி சிறப்பு. இது போன்ற சூழ்நிலையை உருவாக்கிய பயிற்சியாளர் குழுவுக்கு நன்றி. களத்தில் மேஜிக் தருணத்தை உருவாக்கிய வீரருக்கு ஸ்பெஷல் விருதை வழங்க என்னை அழைத்ததற்கு நன்றி. அதை எப்போதும் பேச்சில் நடக்கும் அக்சர் பட்டேல் வென்றுள்ளார்” என்று சொல்லி கழுத்தில் அணிவித்தார். அப்போது மொத்த இந்திய அணியினரும் ஆர்ப்பரித்தனர்.

Advertisement