விராட் கோலியால் நிச்சயம் அந்த சாதனையினை நிகழ்த்த முடியும்.. நம்பிக்கை தெரிவித்த – சோயிப் அக்தர்

Akhtar
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி கடந்த சில தொடர்களாகவே மோசமான பேட்டிங் ஃபார்ம் காரணமாக சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வந்ததால் அவரது சமீபத்திய பார்ம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் இருந்தன. அதோடு தற்போது 36 வயதை எட்டியுள்ள அவர் தனது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் வேளையில் இளம் வீரர்களுக்கு வழிவிட்டு அவர் ஓய்வு அறிவிக்க வேண்டும் என்கிற அளவுக்கு எல்லாம் பேச்சுகள் இருந்து வந்தன.

விராட் கோலியால் நிச்சயம் அது முடியும் : சோயிப் அக்தர்

ஆனால் டி20 வடிவ போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற விராட் கோலி தொடர்ந்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தனது கவனத்தை செலுத்தி விளையாடி வருகிறார். அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அவரது சிறப்பான ஆட்டம் வெளிப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் வங்கதேச அணிக்கு எதிரான முதல் போட்டியில் சொதப்பிய கோலி பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சதம் அடித்து அசத்தியுள்ளார்.

- Advertisement -

அந்த வகையில் நேற்று துபாய் நகரில் நடைபெற்ற மிக முக்கியமான லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 242 ரன்களை துரத்திய இந்திய அணி சார்பாக இறுதிவரை ஆட்டமிழக்கமால் இருந்த விராட் கோலி 111 பந்துகளை சந்தித்து 7 பவுண்டரிகளுடன் 100 ரன்கள் குவித்து சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது 51 வது சதத்தை பூர்த்தி செய்து ஆட்டம் இழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

அவரது இந்த ஆட்டம் அவரின் மீது உள்ள விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இருந்தது. இந்நிலையில் பாகிஸ்தான் அணி என்று வந்தாலே விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிடுவார் என்பதை மீண்டும் ஒருமுறை விராட் கோலி நிரூபித்துக் காட்டியுள்ளதாக அந்த அணியின் முன்னாள் வீரரான சோயிப் அக்தர் பாராட்டி உள்ளார். இது குறித்து பேசிய அவர்கூறுகையில் :

- Advertisement -

விராட் கோலியிடம் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடுகிறோம் என்று சொன்னால் அவர் முழுமையாக தயாராகி வந்து சதம் அடிப்பார். அந்த வகையில் இந்த போட்டியிலும் அவர் மிகச் சிறப்பாக விளையாடியதை நாம் பார்த்துள்ளோம். அவருக்கு நான் தலை வணங்குகிறேன். விராட் கோலி போன்ற ஒரு மிகச்சிறந்த ஒருநாள் வீரரை நான் பார்த்ததில்லை.

இதையும் படிங்க : சி.எஸ்.கே அணியின் புதிய பந்துவீச்சு உதவி பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட தமிழக வீரர் – இவர் யார் தெரியுமா?

அவர் நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்பதிலும் சந்தேகம் இல்லை. சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 14000 ரன்களை பூர்த்தி செய்த விராட் கோலி ஒட்டுமொத்தமாக 100 சதங்களை அடிப்பார் என்று நம்புகிறேன். அவர் அதை செய்ய தகுதியான வீரர் தான் அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என அக்தர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement