6 ரன்ஸ்.. 10 ஓவரில் வெறும் 38.. டெஸ்ட் ஆடிய எம்ஐ மும்பை அணியை மழையை தாண்டி வீழ்த்திய ஜேஎஸ்கே சென்னை

- Advertisement -

தென்னாப்பிரிக்காவில் எஸ்ஏ 2025 டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அதில் ஜோகன்ஸ்பர்க் நகரில் ஜனவரி 11ஆம் தேதி நான்காவது லீக் போட்டி நடைபெற்றது. அந்தப் போட்டியில் எம்ஐ கேப் டவுன் மற்றும் ஜோகன்ஸ்பர்க் சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. அந்த போட்டியில் டாஸ் வென்ற ஜேஎஸ்கே முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

அதை தொடர்ந்து களமிறங்கிய எம்ஐ அணிக்கு எதிராக ஜேஎஸ்கே துல்லியமாக பந்து வீசியது. அதனால் அதிரடி காட்ட முடியாமல் திணறிய ராசி வேன் டெர் டுஷன் 4 (10), ரீசா ஹென்றிக்ஸ் 4 (13), கோனர் 8 (13), கோலின் இக்ரம் 11 (12) ரன்களில் அவுட்டாகி பெரிய ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் முதல் 10 ஓவரில் டெஸ்ட் போல மெதுவாக விளையாடிய அந்த அணி 38-4 ரன்கள் மட்டுமே எடுத்து திணறியது.

- Advertisement -

சுமாரான பேட்டிங்:

அடுத்ததாக வந்த தேவால்டு ப்ரேவிஸ் 14 (13), ஓமர்சாய் 1 (2) ரன்களில் அவுட்டாகி பின்னடைவையே கொடுத்தனர். இறுதியில் ஜார்ஜ் லின்டே அதிரடியாக 48* (35), டிலேனோ போட்கிட்டர் 44* (22) ரன்கள் விளாசி அசத்தினார்கள். அதனால் தப்பிய எம்ஐ 20 ஓவரில் 140-6 ரன்கள் எடுத்த நிலையில் ஜேஎஸ்கே அணிக்கு அதிகபட்சமாக டேவிட் வீஸ், லூத்தோ ஷிபலாமா, எவன் ஜோன்ஸ், டப்ரைஸ் சம்சி தலா ஒரு விக்கெட் எடுத்தார்கள்.

பின்னர் 141 ரன்களை துரத்திய ஜேஎஸ்கே அணிக்கு டேவோன் கான்வே 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அப்போது மழை வந்து மீண்டும் நடைபெற்ற போட்டியில் கேப்டன் டு பிளேஸிஸ் 30 (23) ரன்களும் அடுத்ததாக வந்த ஜானி பேர்ஸ்டோ 14 (14) ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தார்கள். அதே போல மறுபுறம் டு பிளாய் 24* (23) ரன்கள் எடுத்ததால் 11.3 ஓவரில் ஜேஎஸ்கே 82-3 ரன்கள் எடுத்த போது மீண்டும் மழை வந்தது.

- Advertisement -

ஜேஎஸ்கே வெற்றி:

அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி எம்ஐ விட ஜேஎஸ்கே 6 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தது. அதனால் இப்போட்டியில் ஜேஎஸ்கே 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதாக அறிவிக்கப்பட்டது. எம்ஐ அணிக்கு அதிகபட்சமாக ரபாடா இரண்டு விக்கெட்டுகள் எடுத்து போராடியும் தோல்வியை தவிர்க்க முடியவில்லை. அந்த வகையில் இந்த தொடரை ஜேஎஸ்கே அணி முதல் போட்டியிலேயே வென்று வெற்றிகரமாக துவக்கியுள்ளது.

இதையும் படிங்க: கடைசியாக தெ.ஆ தொடரில் விளையாடிய பின்னர் இங்கிலாந்து டி20 தொடரில் இருந்து நீக்கப்பட்ட – 5 வீரர்கள்

இந்த வெற்றிக்கு முக்கிய பங்காற்றிய டு பிளேஸிஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார். ஐபிஎல் தொடரில் பரம எதிரிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை அணிகளின் கிளை அணிகள் தான் இப்போட்டியில் மோதின. அதில் சிஎஸ்கே அணியின் கிளை வென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement